இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்டகாரண்யம். இந்த படத்தை இரண்டாம் உலகப்போரின் கடைசி கொண்டு படத்தை இயக்கிய இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள் தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பழங்குடியினர் வாழ்க்கையில் நடந்த அநீதிகளை மையமாக வைத்து எடுத்து இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் வனப்பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் தினேஷ், அவருடைய மனைவி ரித்விகா, சகோதரர் கலையரசன், அப்பா, அம்மா எல்லோருமே ஒரு குடும்பமாக வசித்து வருகிறார்கள். அதில் கலையரசன் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டில் டெம்பரவரியாக கார்டாக வேலை செய்து கொண்டிருக்கிறார். எப்படியாவது நிரந்தரமாக அரசு ஊழியர் ஆக வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் கலையரசன். இதற்கு இடையில் உயர் அதிகாரிக்கும் தினேஷுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் கலையரசனுடைய தற்காலிகமான வேலையை பறித்து விடுகிறார்கள்.
இதனால் உறவினர்கள் எல்லோருமே தினேஷ் உடைய குடும்பத்தை அவமானப்படுத்துகிறார்கள். எப்படியாவது தன்னுடைய தம்பியை அரசு பணியில் சேர்த்து அவரை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று தினேஷ் ஒருவருடைய சிபாரிசில் நக்ஸலைட்டுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு உருவாக்கியதாக சொல்லப்படும் சிறப்பு பாதுகாப்பு பணியில் கலையரசனை சேர்த்து விடுகிறார். இதற்காக தங்களுடைய விவசாய நிலத்தை கூட விற்று பணம் கொடுத்து அனுப்புகிறார் தினேஷ்.

அதற்குப்பின் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் படைப்பிரிவில் சேர்ந்த கலையரசன் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு அவர் பல கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கிறார். மீண்டும் அரசு வேலையோடு தான் ஊர் திரும்ப வேண்டும் என்று கலையரசன் போராடுகிறார். ஆனால், அந்த இடத்திற்கு போனவர்கள் யாருமே உயிரோடு சென்றது கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவருகிறது. அங்கு அரசு வேலைக்கு யாரையுமே எடுப்பதில்லை. அங்கு சேர்ப்பவர்கள் உயிரை பறித்து விடுகிறார்கள் என்பதை கலையரசன் தெரிந்து கொள்கிறார்.
இதை அடுத்து அங்கு என்னதான் நடக்கிறது? அங்கிருந்து கலையரசன் தப்பித்தாரா? தினேஷிற்கு உண்மை தெரிய வந்ததா? அதனுடைய பின்னணி என்ன என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தினுடைய முதல் பாதி கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் தான் நடக்கிறது. கலையரசன் காதல், வனத்துறை அதிகாரிகள் உடைய அத்துமிரல், அட்டூழியம், தினேஷ் குடும்பம் என்று செல்கிறது. இடைவெளிக்குப் பின் பயிற்சி என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள், ஊழல் போன்றவற்றை வெளிச்சம் போட்டு இயக்குனர் காட்டி இருக்கிறார்.

பழங்குடியின மக்களின் பிரதிபலிப்பாக தினேஷ், கலையரசன் இருவரும் நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தையுமே தங்களுடைய நடிப்பின் மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சமூக உண்மைகள், வனப்பகுதி பின்னணியை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக இயற்கை அழகுகள், காட்டினுடைய சூழ்ச்சிகள் எல்லாமே பார்வையாளர்களை ஈர்த்து இருக்கிறது.
நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்தார்கள். படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்கள் எல்லாம் ரசிக்கும் படியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரிய ஒன்று. பழங்குடியினருடைய நில உரிமை, வாழ்க்கை நிலை, காட்டுப்பயிர், அவர்களுடைய மரபு ஆகியவற்றினுடைய பாதுகாப்பு அனைத்தையும் இந்த படத்தில் இயக்குனர் காண்பித்திருப்பது சிறப்பாக இருக்கிறது. ஜஸ்டின் உடைய பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்றும் பார்க்கும் படமாக தான் தண்டகாரண்யம் இருக்கிறது.
https://youtu.be/PmghetIh-MM?si=jBVH3f1ExUcjP6T0
நிறை:
கலையரசன் தினேஷ் நடிப்பு அற்புதம்
மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
கதைகளம் அருமை
கதைக்களம் கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது.
சமூகத்திற்கு சொல்லும் மெசேஜ்

குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
காதல் காட்சிகள் ஒட்டவில்லை.
படத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவுமே இல்லை
மொத்தத்தில் தண்டகாரண்யம் - வீரியமிக்க குண்டு






