வையாபுரி நடத்திய போட்டோ ஷூட் தினேஷ் கார்த்திக் என்று கிளப்பிவிட்ட நெட்டிசன்கள் – தினேஷ் கார்த்திக் அளித்த பதில பாருங்க.

0
14867
dinesh
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் வையாபுரி நடத்திய லேட்டஸ்ட் புகைப்படத்தை தன் உருவத்தோடு ஒப்பிட்ட ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்று வரை விளையாடி வருகிறார். தினேஷ் கார்த்திக் தோனிக்கு முன்னரே அறிமுகமாகி தற்போது வரை இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருபவர். 2003 ஆம் ஆண்டு அறிமுகமானவர். 17 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளேயும், வெளியேயும் ஆடிக் கொண்டிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் இவருக்கு தற்போது வரை அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தற்போது 33 வயதான அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வேட்கையை விட்டுவிடவில்லை. தொடர்ந்து போராடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் எப்போதும் அடித்து துவம்சம் செய்து வருகிறார். சென்ற வருடம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு இறுதிப் போட்டியில் கூட கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தவர். அந்த போட்டியில் மட்டும் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நேற்று முதன் முறையாக ரம்யாவிடம் காணாமல் போன Manufacturing Defect – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அதே போல கிரிக்கெட் போட்டிகளில் இவர் ஸ்டாம்ப்பிற்கு பின்னால் இருந்து பல முறை தமிழில் பேசிய வீடியோகள் இணையத்தில் பல முறை வைரலாகியும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தினேஷ் கார்த்திகை, காமெடி நடிகர் வையாபுரியுடன் ஒப்பிட்டு பல மீம்கள் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பல்வேறு நடிகர்கள் படு ஸ்டைலிஷான போட்டோ ஷூட்களை நடத்தி அசத்தி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக பிக் பாஸ் பிரபலங்களான சென்ட்ராயன், சரவணன், சாண்டி என்று பலரின் Transformation புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வையாபுரியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து பலரும் வியந்துபோயுள்ளார்கள். அதிலும் இந்த புகைப்படத்தில் நடிகர் வையாபுரி, தினேஷ் கார்த்திகை போலவே இருக்கிறார் என்று பல மீம்கள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த கேலிக்கு ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள தினேஷ் கார்த்திக் ‘நான் அவன் இல்லை, வையாபுரி என்னுடைய டூப் என்பது இதுவரை எனக்கு தெரியாது’ என்று மிகவும் கூலாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement