எப்படி இதெல்லாம் நோட் பண்றீங்கன்னு கேட்டார். வாத்தி பாடல் நடன இயக்குனர்.

0
15589
master

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தளபதி விஜய் படத்தின் கதை சுமாராக இருந்தாலும் கூட ரசிகர்கள் அதை சூப்பர் ஹிட் ஆகி விடுவார்கள். அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டவர்.கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம், கைதி ஆகிய வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து வாதி கம்மிங் என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் தினேஷ் மாஸ்டர் பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறியுள்ளார். தினேஷ் குமார் திரைப்பட நடன இயக்குனர் ஆவார். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர்.

இவர் நடன இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். மேலும், இவர் மாஸ்டர் படத்தில் வெளிவந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்த பாடல் குறித்து பேட்டியில் தினேஷ் மாஸ்டர் அவர்கள் கூறியிருந்தது, விஜய்யின் நடன அசைவுகள் எல்லாம் வேற லெவல். நான் ஒரு நாள் சார் நீங்க சண்டைக்காட்சி போது உதட்டை கடித்துக் கொண்டு கொடுத்த ரியாக்ஷன் சூப்பர் என்று கூறினேன். அதற்கு விஜய் அவர்கள் சிரித்துக் கொண்டே எப்படி மாஸ்டர் இவ்வளவு கவனமா நோட் பண்ணி இருக்கீங்க என்று ஆச்சரியமாக என்னிடம் கேட்டார். அதற்கு நான் உங்களுடைய தீவிர ரசிகர், உங்களை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement