பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்.! திரையுலகினர் இரங்கல்.!

0
474
Mehendran
- Advertisement -

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோளொன்றி நின்று வந்த இயக்குனர் மகேந்திரன் இன்று (ஏப்ரில் 2) உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-
Image result for director mahendran

ஆரம்ப காலகட்டத்தில் பத்திரிகையாளராக இருந்த இவரை சினிமா துறைக்கு கொண்டு வந்தவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் தான். 1996 ஆம் ஆண்டு ‘நாம் மூவர்’ என்ற படத்தில் கதை ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து ‘முள்ளும் மலரும்’ மலரும் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு ரஜினிக்கும் அந்த படம் மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது.

Image result for director mahendran

அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கிய இவர் விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த பேட்ட போன்ற படங்களிலும் நடித்திருந்தார். கடந்த சில காலமாக சிறு நீராக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement