இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமண தேதி அறிவிப்பு.! பெண் யார் தெரியுமா.?

0
5799
a-l-vijay
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது.

-விளம்பரம்-
Image result for director a l vijay

சில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது. திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் ஏ எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கிவருகிறார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

amala-paul-al-vijay

தற்போது விஜய்கு 39 வயதாகிறது இதனால் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளாராம். ஏ எல் விஜய் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர். 

-விளம்பரம்-
Advertisement