மும்தாஜ் அப்படி இல்ல.! இதுதான் அவர் உண்மை முகம்.! இயக்குனர் வெங்கடேஷ் வெளியிட்ட உண்மை.!

0
375
mumtaz

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மும்தாஜ் தான் தற்போது பெரும்பானோற்கு அபிமானமான போட்டியாளராக மாறி வருகிறார். ஆரம்பத்தில் நடிகை மும்தாஜ் சர்வாதிகாரம் செய்கிறார் என்று குறை கூறிவந்த பலரும் தற்போது மும்தாஜ் தான் சரியாக நடந்து கொள்கின்றார் என்று கூறி வருகின்றனர்.

mumtaj

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான வெங்கடேஷ், மும்தாஜின் உண்மையான குணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய ‘சாக்லேட்’ படத்தில் இரண்டாம் கதாநாயாகியாக நடித்துள்ள மும்தாஜ், அதன் பின்னர் வெங்கடேஷ் இயக்கிய “குத்து, ஏய்” போன்ற படங்களில் குத்து பாட்டிற்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெங்கடேஷிடம், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்குபெற்றுள்ள மும்தாஜ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் வெங்கடேஷ் பதிலளிக்கையில், என்னுடன் அவங்க மூணு படம் பண்ணி இருக்காங்க. எப்போதும் அவங்க மிகவும் அமைதியாக தான் இருப்பாங்க.படங்களில் கிளாமர் கதாபாத்திரம் பண்ணா கூட அவங்க மிகவும் பக்தி உடையவங்க.

mumtaz

அதே போல அவங்க உண்டு அவங்க வேல உண்டுன்னு இருப்பாங்க. அவங்க கண்டிப்பாக பிக் பாஸ்ல ஒரு நல்ல பேர் வாங்குவாங்கனு எனக்கு தெரியும். அவங்களோட உண்மையான குணம் தான் பிக் பாஸ்ல பிரதிபலிக்குது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவங்க ஆடியன்ஸ கவர் பண்ண நடிக்கல அது அவங்க அவங்களா இருக்காங்க என்று மும்தாஜ் குறித்து கூறியிருந்தார் இயக்குனர் வெங்கடேஷ்.