. தமிழ் சினிமாவில் கூட்டு குடும்பத்திற்கு உதாரணம் என்றால் சிவாஜி குடும்பம் தான். சென்னையில் அன்னை இல்லத்தில் சிவாஜி குடும்பம் மட்டும் இல்லாமல் அவருடைய சகோதரர்கள், குடும்பம் எல்லாம் ஒன்றாக தான் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அதோடு சிவாஜி குடும்பத்தை பொறுத்தவரை ஒரே குடும்பத்திலிருந்து பெண், மாப்பிள்ளை எடுப்பது தான் வழக்கம். சிவாஜியின் மனைவி கமலா அம்மாவும் அவருடைய தம்பி சண்முகத்தின் மனைவி அலமேலுவும் அக்கா- தங்கைகள்.

மேலும், சிவாஜி உயிருடன் இருக்கும் வரை உறவுக்குள் சின்ன சின்ன பிரச்சனை வந்தால் கூட எல்லாத்தையும் சரி செய்து விடுவார். அவருடைய சொல்லுக்கு அனைவருமே கட்டுப்பட்டு விடுவார். சிவாஜியின் மறைவிற்கு பிறகு சில ஆண்டுகளில் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாக மாறியது. குறிப்பாக, சிவாஜி கணேசன் இரண்டு மகள்களுமே பிறந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவி வெளியேறி விட்டார்கள். சிவாஜியின் தம்பி, மறைந்த சண்முகத்தின் குடும்பமும், ராம்குமார்- பிரபு குடும்பத்துடன் சேர்ந்து இன்னைக்கும் அன்னை இல்லத்தில் தான் இருக்கிறார்கள்.
சிவாஜி குடும்பம்:
சிவாஜி குடும்பத்தில் பிரச்சனை தொடங்கியதே இந்த சொத்து பிரச்சனை தான். இதற்கு இடையில் சொந்தம் விட்டு விடக்கூடாது என்று பிரபு தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை.சகோதரி தேன்மொழி மகன் குணாலுக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார். ஆனால், இவர்கள் இடையே குடும்ப வாழ்க்கை சரியாக இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டார்கள்.

பிரபு மகள் திருமணம்:
ஏற்கனவே சொத்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுடைய விவாகரத்தும் சேர்ந்து கொண்டது. சொல்லப்போனால் சொத்து பிரச்சனையால் தான் ஐஸ்வர்யா- குணால் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அதன் பின் கடந்த 2023 ஆம் ஆண்டுதான் ஐஸ்வர்யாவிற்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. இதில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=szsor2Qhe3s
ஐஸ்வர்யா குழந்தை:
இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனால் பிரபு குடும்பத்தினர் ரொம்ப அக்கறையோடும் கவனமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தார்கள். தற்போது அவர் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக பிரபு குடும்பத்தினர் அறிவித்திருக்கிறார்கள். பலருமே ஐஸ்வர்யா- ஆதித் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






