ஆஸ்கர் எல்லாம் பெரிய விஷயம் இல்ல, ரஜினி படத்துக்கு எதுக்கு விருது? எல்லாமே லாபி தான் – சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் அமீர்

0
550
Ameer
- Advertisement -

சிவாஜி படத்தில் நடித்த ரஜினி சிறந்த நடிகரா? அவருக்கு மாநில அரசு விருது கொடுக்கலாமா? என்று கோபத்தில் இயக்குனர் அமீர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து மீடியாவில் நுழைந்தார். பின் இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர். இந்த படத்தில் லைலா, திரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

அமீரின் திரைப்பயணம்:

இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். இந்நிலையில் ரஜினியை விமர்சித்து இயக்குனர் அமீர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. அதாவது, செங்களம் என்ற இணைய தொடர் ஜீ 5 என்ற ஓடிடி தளத்தில் மார்ச் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஆஸ்கர் குறித்து அமீர் :

தற்போது இந்த தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் செங்களம் தொடருடைய படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் பேசி அமீர், செங்களம் கதையை என்னை நினைத்துதான் இந்த இயக்குனர் எழுதி இருக்கிறார். இந்த ட்ரைலரை பார்த்தவுடன் இதில் நடித்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அப்போதே எஸ்.ஆர். பிரபாகரன் வெற்றி பெற்று விட்டார் என்று அமீர் பேசிக் கொண்டிருக்கும் போது செய்தியாளர்கள் ஆஸ்கர் விருது பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

அதற்கு அவர், என்னை பொருத்தவரையில் ஆஸ்கர் விருது என்பது அந்த நாட்டினுடைய தேசிய விருதுதான். அதை என்றைக்கும் நான் பெரிதாக கருதியது கிடையாது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை. அவ்வளவுதான் எல்லாம். கடைசியாக தேவர் மகன் படத்தில் நடித்த சிவாஜிக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்னாலே சிறந்த விருதுகள் என்பதையெல்லாம் முடிந்து போய்விட்டது. இப்ப எல்லாம் விருதுகள் எல்லாமே லாபி தான். அதேபோல் 2007 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் சிவாஜி படம் வெளியாகியிருந்தது.

ரஜினி சிறந்த நடிகரா ?

அதில் நடித்ததற்காக ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என்ற பிரிவில் மாநில அரசின் விருது வழங்கியிருந்தார்கள். ரஜினியை சிறந்த நடிகர் என சொல்ல முடியுமா? அவர் சிறந்த என்டர்டைனர். ஆனால், சிவாஜி படத்தில் சிறந்த நடிப்பு இருந்ததா? அந்த படத்திற்காக பத்திரிகையாளர்கள் ஞானி உடன் நான் விவாதம் ஒன்றை கூட நடத்தி இருந்தேன். ரஜினியின் சிறந்த நடிப்பு வெளிப்பட்ட முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படத்திற்கு ஏன் விருது கொடுக்கவில்லை. விருதுகள் எல்லாமே ஒரு லாபி தான் என்று அமீர் கூறி இருந்தார்.

Advertisement