பீஸ்ட் படம் இஸ்லாமாபோபியா என்கிற ஒரு நோய் – இயக்குனர் அமீர் காட்டம்.

0
452
Beast
- Advertisement -

பீஸ்ட் படம் இஸ்லாமாபோபியா என்ற நோய் என்று இயக்குனர் அமீர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Beast

மேலும், அனைவரும் எதிர்பார்த்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். பின் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

பீஸ்ட் படம் குறித்த விமர்சனம்:

பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் பீஸ்ட் படம் சூப்பர் ஹிட் என்று சொல்கிறார்கள். இப்படி பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்றும், நிகழ்ச்சி ஒன்றில் கதை எழுதுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் நான் அமர மாட்டேன் என்று நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து உள்ளார்களா.

பீஸ்ட் படம் செய்த வசூல் சாதனை:

இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் படம் குறித்து இயக்குனர் அமீர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் பீஸ்ட் படம் அரசியல் மற்றும் முஸ்லிம் பின்புலமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் குறித்து அமீர் கூறியது:

அதற்கு அமீர் கூறியிருப்பது, பீஸ்ட் படம் இஸ்லாமாபோபியா என்ற நோய். பத்திரிகை செய்திகளையும், ஊடகத்தின் செய்திகளையும் பார்த்துக்கொண்டு வணி கரீதியான இயக்குனர்கள் எடுக்கக் கூடிய முடிவே தவிர இவர்கள் அரசியல் புரிதலுடன் எடுக்கவில்லை என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி அமீர் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

அமீரின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தை இவர் தயாரித்தார். தற்போது இவர் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். அமீர் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு கொண்ட பெரியோர்களே படம் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Advertisement