100 கோடி சம்பளம் கொடுப்பாங்க, அதுக்குன்னு விமலுக்கு 100 கோடி கொடுப்பார்களா ? பிரபல இயக்குனர் கேள்வி.

0
469
vimal
- Advertisement -

சமீபகாலமாகவே சோசியல் மீடியாவில் தமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. தமிழ் நடிகர்கள் எல்லோருமே பட்ஜெட்டைவிட அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் பிறமொழி படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றியடைகிறது. ஆனால், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் படங்கள் சமீபகாலமாக வெற்றி அடையவில்லை என்ற ஒரு சர்ச்சையும் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கே ஜி எஃப் படத்துடன் மோதி தோல்வியுற்றது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட விழாவில் கலந்து கொண்ட அருண்பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவின் நிலை குறித்து கூறி இருப்பது, நாங்கள் திரைப்படத்தில் நடிக்கும் போது 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக பெறுவோம். 90% படத்திற்காக செலவழிப்போம். பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் இருந்த காலம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம். தற்போது தமிழ் சினிமா மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது. அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் படத்தின் பட்ஜெட்டில் 90% சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். மீதி உள்ள 10 சதவீதம் மட்டும் தான் படத்திற்கு செலவழிக்கப்படுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவின் நிலை குறித்து கூறியது:

இப்படி இருந்தால் தமிழ் சினிமாவின் நிலை எப்படி உயரும்? தமிழ் சினிமா தரமற்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அண்டை மாநிலங்களில் உருவாக்கப்படும் பல திரைப்படங்கள் எல்லாம் தமிழகத்தில் வசூலில் வாரி குவித்து வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த அஜீத்-விஜய் படங்கள் எல்லாமே தோல்வி அடைந்தது. அதற்கு காரணம் விஜய், அஜித் அதிகமாக சம்பளம் வாங்குவது தான் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த இயக்குனர் அமீர் அவர்கள் மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

வீடியோவில் 4 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

தமிழ் சினிமா குறித்து அமீர் அளித்த பேட்டி:

RRR, கேஜிஎஃப் படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடைபோடுவது சரியானதாக இருக்காது. தமிழ் சினிமா பின்தங்கி இருப்பது என்று கூறுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் சினிமா ஒருநாளும் பின்நோக்கிச் செல்லாது. நல்ல கதையம்சம் கொண்ட உலகத் தரம் வாய்ந்த படங்கள் தமிழில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிற்கே தமிழ் சினிமா தான் முன்னோடியாக உள்ளது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் அமீர் அவர்கள் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

நடிகர்கள் சம்பளம் குறித்து அமீர் அளித்த பேட்டி:

வியாபாரம் இல்லாமல் கொடுக்கமாட்டார்கள். விமலுக்கு 100 கோடி ரூபாய் தருவார்களா? அந்த காலத்தில் ரஜினி கூட உழைப்பாளி படத்தின்போது வியர்வை சிந்தி உழைக்கிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார். நடிகர்களுக்கு வியாபாரம் இருக்கிறது அதனால் கொடுக்கிறார்கள். இது நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடப்பது. நடிகர்கள் ஒன்னும் எங்களுக்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று பத்திரிகையில் பேட்டி அளிக்கவில்லை, டென்டர் கொடுக்க வில்லை. இது தயாரிப்பாளர்களே அவர்களுடைய வியாபாரத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கொடுக்கிறார்கள்.

படம் வெற்றி , தோல்விக்கு காரணம்:

சம்பளம் வாங்குவதற்கும் அந்த படம் வெற்றி, தோல்விக்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு படம் வெற்றி, தோல்வி அடைவது அது இயக்குனர்கள் கதையைப் பொறுத்தது. அதற்கும் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தோடு சேர்த்து வைத்து பேசுவது தேவை இல்லாத ஒன்று. வியாபாரத்திற்கு ஏற்றவாறு கதையை எப்படி கொண்டு போகலாம் என்று யோசிக்கனும் தவிர நடிகர்களின் சம்பளத்தை பற்றி பேசக்கூடாது. பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன் என்று கூறி இருக்கிறார்

Advertisement