தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் பாண்டியராஜன். இவரை புதுமைக் கலை மன்னன் என்று தான் அழைப்பார்கள். சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். கலைத்துறையின் மேலுள்ள ஈடுபாட்டால் தன்னுடைய இளம் வயதிலேயே திரைத்துறையை சேர்ந்தார். பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக் விசுக்கென நடக்கும் நடை தான்.
இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். தனது 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலம் அடைந்தார். இவர் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றி கொண்டவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம்.
இதையும் பாருங்க : பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கிற்கு முன் முதலில் தனுஷ் என்ன பைக் பயன்படுத்தியுள்ளார் பாருங்க. (இது சூர்யாவால பேமஸ் ஆகிடிச்சி)
இந்நிலையில் நடிகர் பாண்டியராஜனின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கிறார். மேலும், குடிசை பகுதியில் இருந்துள்ள பாண்டியராஜின் குடும்பம் ‘குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டு மனு அளித்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.
ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாண்டியராஜ், நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடனே சினிமா துறையில் நுழைந்தேன். அதற்கு பிறகு எம்ஏ, எம்பில் படிப்பை அஞ்சல் மூலம் படித்தார். இப்போது நான் மூன்று பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன். சினிமா என்பது ஒரு நல்ல தொழில். அது பல பேரை வாழ வைத்திருக்கிறது. என்னுடைய உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என்று நான் நினைக்கவும் இல்லை, ஆசை படவும் இல்லை.ஆனால், நான் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானேன். ஆண் பாவம் என்ற ஒரு படத்தின் மூலமே நான் வீடு வாங்கினேன், கார் வாங்கினேன், அதே வருமானத்தில் திருமணமும் செய்து கொண்டேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.