பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கிற்கு முன் முதலில் தனுஷ் என்ன பைக் பயன்படுத்தியுள்ளார் பாருங்க. (இது சூர்யாவால பேமஸ் ஆகிடிச்சி)

0
5294
dhanush
- Advertisement -

சினிமாவில் வரும் ஒரு சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்துவிடும். அந்த வகையில் சினிமாவில் வந்த எந்தனையோ பைக்குகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு Craze-ஐ ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பொல்லாதவன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தது பல்சர் பைக். தென்னிந்திய தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமா உலகிற்கு ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நடிகர் தனுஷ் அவர்கள் “காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன்,ஆடுகளம், விஐபி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

தனுஷ் எத்தனையோ இயக்குனர்களுடன் பணியாற்றி இருந்தாலும் தனுசுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடம் ஏற்பட ஒரு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றி மாறன் தான். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை போன்ற மூன்று படங்களும் சூப்பர் ஹிட் தான். அதே போல வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான படம் தனுஷ்ஷின் பொல்லாதவன் திரைப்படம் மூலம் தான்.

- Advertisement -

2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பை சைக்கிள் தீவ்ஸ் என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கை வைத்து தான் படமே நகரும். இந்த படத்திற்கு பின்னர் தான் பல்சர் பைக்கை பலரும் வாங்க ஆரம்பித்தனர். ஆனால், உண்மையில் பல்சர் பைக்கிற்கு முன்னர் அப்பாச்சி ( Apache ) தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

Image result for thanush pollathavan movie stils"

மேலும், இந்த ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்ய இருந்தார். இதற்காக போட்டோ ஷூட்கள் எல்லாம் கூட நடத்தப்பட்டது. ஆனால், ஒரு காரணத்தால் இந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலக பின்னர் ரம்யா நாயகியாக கமிட் ஆகி இருந்தார். ஒரு வேலை ஹீரோயினை மாற்றியதால் பைக்கையும் மாற்றிவிட்டார்களோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement