பான் இந்தியா சினிமா, தமிழ் சினிமா பற்றி நடிகர் அனுராக் காஷ்யப் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனுராக் காஷ்யப்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் சோக்டு என்ற வெப் சீரிஸ் ஒன்று வெளியாகி இருந்தது. இதை அடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கி இருந்த “லியோ” படத்தில் அனுராக் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று இருந்தது.
அனுராக் திரைப்பயணம்:
இதை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த ‘மகாராஜா’ படத்தில் வில்லனாக அனுராக் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்தது.
இதை அடுத்து அனுராக் நடித்த Rifle Club படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அனுராக் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அனுராக் பேட்டி:
இந்தநிலை சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுராக், சமீப காலமாக தமிழ் சினிமாவும்- தெலுங்கு சினிமாவும் ஃபேன் இந்திய படங்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிட்டது. இப்போது எல்லாம் தமிழ் சினிமா பாடல்களில் அதிகமாக ஆங்கிலம் தான் பயன்படுத்துகிறார்கள். தமிழ் வார்த்தை குறைவாக தான் இருக்கிறது. ஒரு வெளிநாட்டு ராக் இசை போல தமிழ் சினிமா பாடல்களுமே ஆங்கிலத்தில் மாறிவிட்டது. இவையெல்லாம் தமிழ் பாடல்களே கிடையாது. தமிழ் பாட்டிலேயே தமிழை கேட்க முடியவில்லை. முன்பெல்லாம் இளையராஜா மற்றும் மற்ற இசையமைப்பாளர்களுடைய பாடல்களை தமிழில் இருந்து ஹிந்திக்கு கேட்டும் வாங்கும் நிலை இருந்தது.
View this post on Instagram
தமிழ் சினிமா நிலை:
இப்போது தமிழ் பாடல்கள் அர்த்தமற்றதாக மாறி வருகிறது. மேலும் ஃபேன் இந்தியா படங்கள் என்ற பெயரிலேயே பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதாக சொல்லி மூன்று, நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்கள். படத்தை பட்ஜெட் பணத்தில் எடுப்பதாக சொல்லி செலவழிக்கிறார்களோ, இல்லையோ தேவையில்லாத பெரிய பெரிய செட்டுகள் போட்டே செலவழிக்கிறார்கள். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒரு சில படங்கள் தான் வெற்றி பெறுகின்றது. பல படங்கள் எங்கும் சென்றது என்றே காணாமல் போகிறது. அதிகமாக பணம், பேன் இந்தியா என்ற பெயரில் வீணடிக்கப்படுகிறது. இதன் மூலம் ஊழல் தான் நடக்கிறது.
View this post on Instagram
பேன் இந்தியா சினிமா:
பாகுபலி படத்திற்கு பல மொழிகளில் வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் இந்த பான் இந்தியா டிரெண்டே ஆனது. பாகுபலி படம் நல்ல வரவேற்பு பெற்றதால் அதே மாதிரியான படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். கேஜிஎப் படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படி ஒரே ட்ரெண்டிங்க்கு பின்னால்தான் சினிமா சென்று கொண்டிருக்கின்றது. அது மாறவேண்டும். படத்தின் பட்ஜெட்டையும், ஃபேன் இந்தியாவா? இல்லையா? என்பதையும் படத்தினுடைய கதை தான் முடிவு செய்ய வேண்டும். நாம் அந்த முடிவை எடுக்க கூடாது என்று கூறி இருக்கிறார்.






