முருகதாஸால் விஜய்க்கு வந்த பிரச்சனை..!சர்கார் படம் மீது விசாரணை விரைவில் துவக்கம்..!

0
301
Sarkar

பொதுவாக விஜய் படம் என்றாலே அதற்கு சிக்கல் பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் “சர்கார்” படத்தின் பாரஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதும், சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது வரை பல்வேறு பிரச்சனைகள் படத்திற்கும் நடிகர் விஜய்க்கு கிளம்பியது.

AR Murugadoss

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் உருவானது. அது என்னவெனில் வருண் ராஜேந்தரின் என்ற துணை இயக்குனர் ஒருவர் ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த படத்தின் கதை போலவே ‘செங்கோல்’ என்ற கதையை கடந்த 2007 ஆம் ஆண்டே தான் பதிவு செய்து இருந்த்தாகவும் கூறியிருந்தார்.

எனவே, சர்கார் படத்தின் கதையை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் திருடிவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் “சர்கார்” படத்தின் கதை தன்னுடையது என்று கூறி தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த புகார் குறித்து எழுத்தாளர் சங்கத்தில் விளக்கமளிக்கபட்டபோது, எங்களுடய சங்க நபரிடம் இருந்து புகாரை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த பிரச்னையை விசாரிக்க ஒரு குழு ஒன்றையும் அமைத்துளோம். தற்போது நிலவரபடி எந்த ஒரு முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.