இயக்குனரும் சிவகார்த்திகேயனின் உயிர் நண்பருமான அருண் ராஜாவின் மனைவி கொரோனாவில் மரணம்.

0
877
arun
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : தனது படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட மீரா மிதுன் – இத பாக்குறப்ப அந்த GVM படம் ஞாபகம் வருதா ?

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார். அதே போல இவர் கனா படத்தையும் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.அருண் ராஜா காமராஜ் மனைவியின் இறப்பிற்கும் பல்வேறு திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கொரோனாவால் காலமானதால் அவரது உடலை நேரடியாக சுகாதார துறையினர் அடக்கம் செய்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement