அட்லீ சார் கொஞ்சம் யோசிச்சி பேசுங்க ! இதெல்லாம் நடக்குற காரியமா ?

0
3941
atlee

இதுவரை தான் இயக்கிய 3 படங்களையும் ஹிட் கொடுத்துவிட்டார் அட்லீ. அதிலும் இரண்டு படங்கள் சூப்பர் டூப்பர் ப்ளாக் பஸ்டர். இருந்தும் அவருடைய படத்தின் மீதான விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவர் முதலில் இயக்கிய படமான ராஜா ராணியில் இருந்து தற்போது வந்த மெர்சல் வரை அவர் பழைய படங்களை காப்பி அடிக்கிறார் என்ற ஒரு விமர்சனம் ஓயவில்லை.
Atleeஇது குறித்து அட்லீ கூறியதாவது:

இசையில் ஏழு சுரங்கள் இருப்பது போல் தான் கதையும் , நான் எனக்கு தேவையான கதையை மக்களிடம் இருந்து தான் எடுக்கிறேன். அதே போல் தான் ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களும் அந்த சுரத்திற்குள் அடங்கிவிடும்.

தற்போது வரலாற்றுப் படங்களை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் போன்ற கதைகள் நன்றாக இருக்கும். ரீமேக் செய்வது என்றால் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா’வைத்தான் ரீமேக் செய்வேன். அதிலும் தலைவேரே நடிப்பார். அதே போல், உலக நாயகன் கமல் ஹாசனையும் , சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தையும் ஒரே படத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இருவரையும் வைத்து எடுக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.

மேலும், தல-தளபதியை வைத்தும் இயக்க முடிந்தால் துணிந்து செய்வேன். அது போன்ற ஒரு வாய்ப்பை சவாலாக எடுத்து செய்வது தான் என் வேலை. அப்ப்டி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன், என தன் இமாலய ஆசைகளைக் கூறி முடித்தார் அட்லீ.