சேது பட கதை நான் தான் எழுதி கொடுத்தேன், இன்று அவன் என்னை மறந்துட்டான் – பாலாவின் நண்பரின் பரிதாப நிலை.

0
810
Bala
- Advertisement -

இயக்குனர் பாலாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன் என்று நடிகர் ஆனந்தன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடித்த பல நடிகர்கள் தற்போது வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறார்கள். ஏராளமான முன்னணி நடிகர்கள் எல்லாம் தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் இயக்குனர் பாலா என்று தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்களின் படங்களில் நடித்தவர் நடிகர் ஆனந்தன்.

-விளம்பரம்-

தற்போது இவர் வறுமையின் காரணமாக சாலை ஓரங்களில் கண் கண்ணாடி விற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவரைப் பற்றி அறிந்த பிரபல பத்திரிகை பேட்டி ஒன்று அளித்திருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் ஆனந்தன். என்னுடைய ஊர் தர்மபுரி. சென்னைக்கு நான் 13 வயதில் வந்தேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினி ரசிகன். அவர் மீது இருந்த ஈடுபாட்டால் தான் நான் சென்னைக்கு வந்தேன்.

- Advertisement -

ஆனந்தன் அளித்த பேட்டி:

வேலை தேடி ரொம்ப கஷ்டப்பட்டேன். பின் ஒரு ஆட்டோக்காரர் எனக்கு உதவி செய்தார். ஆரம்பத்தில் கிடைக்கும் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தேன். பின் ரஜினியின் பணக்காரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கேட்டது. ரஜினியுடன் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பணக்காரன் படத்தில் டைட்டில் முடிந்த உடனே ஃபைட் சீன் வரும். அப்போது அந்த சீனில் பனியன், டாயர் போட்டிருப்பேன்.

ரஜினி குறித்து சொன்னது:

தலைவா தலைவா அடிச்சிட்டான் என்று சொல்லுவேன். அப்ப ரஜினி என்ட்ரி கொடுத்த ஒரு காம்பினேஷனில் நடித்திருப்பேன். அதேபோல் சேது படம் ஒரு சைக்கோ தன்மை என்று சொன்னார் பாலா. படம் இப்படி எல்லாம் எடுக்கக் கூடாது. ஹீரோ கல்லூரியில் படிக்கிறான். ஒரு பொண்ணை வலுக்கட்டாயமாக காதலிக்க சொல்கிறான். இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சைக்கோ தனமாக இருக்கிறது. அதை விட்டு விடு என்று பாலாவிடம் சொன்னேன்.

-விளம்பரம்-

சேது படம் உருவானது:

பின் நான் அந்த கதையை நீட்டா எழுதி கொடுத்தான். அதோடு அவனுக்கு பாலா என்ற பெயரை நான் தான் வைத்தேன். எனக்கு பாரதிராஜாசார் பிடிக்கும். பாலச்சந்திரன் என்னுடைய குரு. இரண்டு பேரையும் சேர்த்து பாலா என்று நான் அவனுக்கு பெயர் வைத்தேன். சேது படம் ஹிட்டாகிவிட்டது. அதற்குப் பிறகு நான் அவருடைய அலுவலகத்திற்கு போகிறேன். என்னை அவன் அவாய்ட் பண்ணிக் கொண்டே இருந்தான். நான் மூணு மாதம் அவரிடம் பேச முயற்சி செய்தேன்.

பாலா குறித்து சொன்னது:

எனக்கு வாய்ப்பு கொடு என்று கேட்டேன். பின் அவன் கூட்டிட்டு போனான். சூர்யாவின் ஏதோ ஒரு படத்தில் பண்ண வைத்தான். ஒரு மூன்று நான்கு நாட்கள் வைத்து விட்டு சாட் எடுத்து அனுப்பி விட்டான். அதற்கு பிறகு அவன் என்னை அழைக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. என்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும். வறுமை கொடுமை அதிகமாக இருக்கிறது. அதற்காக ரோட்டில் கண்ணாடி விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement