நான் கடவுள் படத்தில் இருந்து விலகிய அஜித், பிரச்சனை குறித்து கேட்டதற்கு பாலா சொன்ன Thug life பதில். வீடியோ இதோ.

0
1152
Bala
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார். பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

பொதுவாக பாலா படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கவே தயங்குவர். அதற்கு முக்கிய காரணம் பாலா ஒரு டெரர் பீஸ். நடிப்பு சொல்லித்தரும் போது பல நடிகர்களை திட்டியும் இருக்கிறார் சிலரை அடித்தும் இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் பாலா, அஜித்தை ரூமிற்குள் வைத்து அடித்ததாக ஒரு சர்ச்சை இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் முதன் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது.

இதையும் பாருங்க : மறைந்த நடிகை சித்ராவின் மகளை பார்த்துளீர்களா ? விஜய் இருக்கும் ஏரியாவில் சித்ரா நடத்தி வந்த ஹோட்டல் இதான்.

- Advertisement -

நான் கடவுள் படத்தில் அஜித் :

பின்னர் அந்த படத்தில் இருந்து ஒரு சில காரணத்தால் அஜித் விலகினார் என்றும், நடிகர் அஜித் அந்த படத்தில் கோவணம் கட்டிக்கொண்டு நடிக்க சம்மதம் தெரிவிக்காததால் தான் அந்த படத்தில் இருந்து விலகினார் என்ற செய்திகளும் அப்போது பரவியது. ஆனால், உண்மையில் நான் கடவுள் விவகாரத்தில் அஜித்திற்கு பாலாவிற்கும் என்ன நடந்து என்பதை பிரபல யு-டியுப் சேனலில் பத்திரிகையாளர் ஒருவர் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

நீக்கப்பட்ட அஜித் :

நான் கடவுள் படத்திற்காக அஜீத் உடம்பை கஷ்டப்பட்டு குறைத்து நீளமான தலைமுடி வைத்திருந்தார். இந்நிலையில் ஒரு நாள் அஜித்திற்கு ஒரு செய்தி வந்தது. நான் கடவுள் படத்தில் இருந்து அஜித்தை நீக்கி விட்டார்கள் என்று. இதனால் அஜித் மிகவும் அப்செட் ஆக இருந்தார். மேலும் இந்த படத்திற்காக அஜித்க்கு ஒரு கோடி ரூபாய் முன்பணமாக கொடுத்திருந்தார் பாலா. இந்த பிரச்னையை அடுத்து அஜித் மற்றும் பாலா இருவரும் அறையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

-விளம்பரம்-

வட்டியுடன் கொடுத்த அஜித் :

அதில் பாலா வட்டிக்கு பணம் வாங்கிய மதுரை அன்புச்செழியன் அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் கூடவே இருந்திருக்கிறார்கள்.அப்போது பாலா, அஜித்திடம் வழங்கிய 1 கோடி ரூபாய் முன்பணத்தை திருப்பி தந்துவிடும்படி கேட்டுள்ளார்.அஜித்தும் தான் வாங்கிய முன்பணமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி விட்டார்.ஆனால், பாலாவிற்கு பணம் கொடுத்த அன்பு செழியனுக்கு 1 கோடிக்கான வட்டியையும் அஜித்தான் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் சிறிது வாக்குவாதமும் அங்கே நிலவியுள்ளது.

Ajith Naan Kadavul Movie Poster

பாலா கொடுத்த பதில் :

இறுதியில் நடிகர் அஜித், உங்களுக்கு என்ன வட்டி தானே அதையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று தான் வாங்கிய 1 கோடி ரூபாய் முன் பணத்தையும் வட்டியுடன் பாலாவிற்கு கொடுத்துள்ளார் அஜித். ஆனால், பாலா அஜித்தை அடித்தாரா என்பதை பாலாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், நான் அஜித்தை அடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு சங்கீதா, அப்போ என்ன நடந்தது என்று கேட்க ‘அத நீங்க அல்டிமேட்டை கேக்க வேண்டிய கேள்வி, என்கிட்ட என் கேக்குறீங்க’ என்று Thug பதிலை கொடுத்துள்ளார்.

Advertisement