நடிகர் விக்ரம் குறித்த கேள்விக்கு இயக்குனர் பாலா அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். வணங்கான் படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.
வணங்கான் ப்ரோமோஷன் :
அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வணங்கான் பட ப்ரமோஷனுக்காக இயக்குனர் பாலா பல்வேறுப் பேட்டிகளை அளித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் விக்ரம் பற்றியும் 'வர்மா' படம் பற்றியும் பாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் விக்ரம் பற்றிய கேள்விக்கு ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, 'இந்த அமைதி தான் பதில்' என்று பாலா பதில் அளித்துள்ளார். மேலும், 'வர்மா' படம் குறித்து இதுவும் பேச விரும்பவில்லை என்ற வகையில் நடந்து கொண்டார். இதன் மூலம் விக்ரமுக்கும் பாலாவுக்கும் இடையேயான மோதல் முதல் இன்னும் தொடர்கிறது என்று தெரிய வருகிறது.
https://www.youtube.com/watch?v=_7XJ19Vqz0I&t=843s
விக்ரம் - பாலா மோதல்:
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தை தமிழில் "வர்மா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாக இருந்த இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும், இதே கதை புதிய இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களுடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்று பட நிறுவனம் அறிவித்தது.
வர்மா படம் :
மேலும் அவர்கள், நாங்கள் எதிர்பார்த்தது போல் 'வர்மா' படத்தை பாலா இயக்கித் தரவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக அவர்கள் படத்தின் கிளைமாக்ஸை மாற்ற கேட்டதாகவும், பாலா அதற்கு மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. மேலும், நடிகர் விக்ரமுக்கும் படத்தில் சில காட்சிகள் உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இதன் பின் படம் வேறு இயக்குனர் இயக்க, விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் வெளியானது. ஆனால், இந்த விவகாரம் குறித்து விக்ரம் மற்றும் பாலா இருவருமே இதுவரை எதுவுமே பேசாமல் இருந்தனர்.

பாலா 25 :
சமீபத்தில், இயக்குனர் பாலாவின் 25 வருட சினிமா பயணத்தை பாராட்டி விழா எடுக்கப்பட்டது. அதில் பாலா இயக்கத்தில் நடித்த அனைத்து ஹீரோக்களும் ஹீரோயின்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், இதிலும் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் விக்ரம் ஏன் கலந்து கொள்ளவில்லை. இன்னமும் இவர்கள் மோதல் நீடிக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். தற்போது, பாலா பேட்டியில் விக்ரம் மற்றும் வர்மா படம் குறித்து கூறியிருக்கும் பதில்களை பார்க்கும்போது இவர்கள் சண்டை நீடிக்கின்றது என்றுதான் தெரிகிறது.






