நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற IAS அதிகாரியை திட்டியுள்ள பாலா – இப்படியா திட்டுவது.

0
605
bala
- Advertisement -

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற ஐஏஎஸ் அதிகாரியை தகாத வார்த்தையில் இயக்குனர் பாலா திட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

- Advertisement -

பாலா திரைப்பயணம்:

மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார். அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல பாலா ஒரு டெரரான ஆள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகி வந்த படம் வணங்கான். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்து இருந்தது.

வணங்கான் படம்:

பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருந்தது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பூஜை போட்டு அமர்க்களமாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருந்ததாகவும், படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

படத்தில் சூர்யா விலகல்:

பின் இதெல்லாம் வதந்தி என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு நடந்தது. மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படி ஒரு நிலையில் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதாக இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து சூர்யாவும், 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனமும் வணங்கான் படத்தில் இருந்து விலகி இருப்பதாக twitter பக்கத்தில் அறிவித்து இருந்தார். தற்போது இந்த படத்தில் புதிதாக ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் பாலா கடுமையாக நடந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரியை திட்டிய பாலா:

இயக்குனர் பாலா அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுமையாக நடந்து கொள்வதும், பேசுவதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒரு முறை பாலாவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார். அப்போது பாலாவிடம் அலுவலகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் என்பவர் சிறிது நேரம் காத்திருங்கள் அவர் வந்துவிடுவார் என்று சொல்லி இருக்கிறார். பின் பாலா வந்து அந்த ஐஏஎஸ் அதிகாரியை பார்த்து, “யார் இந்த ***” என்று கேட்டிருக்கிறார். இதனால் அவர் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதன் பின் பாலா, நீ ஒழுங்கா நடிக்கவில்லை என்றால் குரவளையை பிடித்து கடித்திடுவேன் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து வெளியே வந்த ஐஏஎஸ் அதிகாரி, எனக்கு நடிப்பு வேண்டாம். பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறேன் என்று ராமகிருஷ்ணனிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

Advertisement