கோபிநாத்தை கிண்டல் செய்த பாலா..? பதிலுக்கு கலாய்த்த கோபிநாத்.! மேடையில் நடத்த சம்பவம்

0
616
gopinath

விஜய் டிவியின் ஆஸ்த்தான தொகுப்பாளராக இருந்து வரும் கோபி, ‘நீயா நானா ‘ என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமடைந்தார். அவருக்கு இணையாக அவர் அணிந்து வரும் கோட்டும் மக்கள் மத்தியில் படு பேமஸ். ஏனெனில் அவருடைய கோட்டை பல பிரபலங்கள் கிண்டல் செய்துள்ளனர்.

விஜய் டிவியின் 10 ஆம் ஆண்டு ‘விஜய் அவார்ட்ஸ்’ விழா சில தினங்களுக்கு முன்னர் வெகு விமர்சியாக நடைபெற்றது. பல்வேறு சினிமா பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிவர்களுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை அந்த படத்தின் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி ஆகியோர்களுக்கு வழங்க இயக்குனர் பாலா மேடைக்கு வந்திருந்தார். அப்போது விழாவின் தொகுப்பாளராக இருந்த கோபியை பார்த்து “கோபி உங்களுக்கென்று ஒரு தனி மரியாதையை இருகிறது. உங்களது புத்தகங்களுக்கென்று பல ரசிகர்களும் உள்ளனர்.

உங்களை நீயா நானா நிகழ்ச்சியிலும், இது போன்ற நிகழ்ச்சியிலும் தான் பார்க்கின்றோம், நீங்கள் போய் இது மாதிரி ஸ்டார் போட்ட கோட்டை எல்லாம் போடலாமா, கழட்டி விடுங்கள் நல்லா இல்லை ” என்று கிண்டலடித்துள்ளார் இயக்குனர் பாலா. இதற்கு பதிலளித்த கோபி ‘பாலா சார், நான் இந்த கோட்டைக் கழட்டினாள் என்னை யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் சார் ‘ என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.