பண மோசடி, பெண்களிடம் வாய்ப்பு தருவதாக குறுஞ்செய்தி – பாலாவிற்கு வந்த புது தலைவலி.

0
1700
- Advertisement -

இயக்குனர் பாலா சென்னை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார். பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார். அதோடு இவர் இயக்கிய முதல் படத்திலேயே மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். மேலும்,அவர் மீது நல்ல நம்பிக்கையும் எழுந்தது. அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள்” நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்” உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்கிய படங்கள் எல்லாமே வித்தியாசமான கோணங்களில் இருக்கும்.

- Advertisement -

மேலும், காதல், ரொமான்டிக், பாடல்,காமெடி என்று கமர்ஷியலாக இருக்காமல் ஒரு புதுமையான கண்ணோட்டத்துடன் இருக்கும் படம் ஆகும். மேலும், இவருடைய கதையும், நடிப்பும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தாலும் வசூல் ரீதியாக பார்த்தால் கொஞ்சம் கம்மி தான். அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்கும் படங்கள் எல்லாம் அதிகமான பட்ஜெட் படங்கள் கிடையாது. சராசரி மனிதனின் அடிப்படை தேவையை உணர்த்தும் கருத்து படம் ஆகும். தற்போது அருண் விஜயை வைத்து வணங்க்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

புகார் மனு :

எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை. தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இயக்குநர் பாலாவின் கவனத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குனர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புணர்வுடன் இருங்கள்” என்று இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார். என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement