இயக்குனர் பாலாவின் மகளா இது ? என்ன இப்படி வளர்ந்துட்டார். புகைப்படம் உள்ளே.

0
106699
bala
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார். பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்

- Advertisement -

மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார். அதோடு இவர் இயக்கிய முதல் படத்திலேயே மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். மேலும்,அவர் மீது நல்ல நம்பிக்கையும் எழுந்தது. அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள்” நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்” உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்கிய படங்கள் எல்லாமே வித்தியாசமான கோணங்களில் இருக்கும். மேலும், காதல், ரொமான்டிக், பாடல்,காமெடி என்று கமர்ஷியலாக இருக்காமல் ஒரு புதுமையான கண்ணோட்டத்துடன் இருக்கும் படம் ஆகும். மேலும், இவருடைய கதையும், நடிப்பும் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தாலும் வசூல் ரீதியாக பார்த்தால் கொஞ்சம் கம்மி தான். அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்கும் படங்கள் எல்லாம் அதிகமான பட்ஜெட் படங்கள் கிடையாது. சராசரி மனிதனின் அடிப்படை தேவையை உணர்த்தும் கருத்து படம் ஆகும்.

இதையும் பாருங்க : விவாத நிகழ்ச்சியில் மீராவிற்கும் லட்சுமி ராமகிருஷ்னனுக்கும் ஏற்பட்ட மோதல். இறுதியில் தெறித்து ஓடிய மீரா

மேலும், பாலா அவர்கள் படத்தில் ஹீரோ, ஹீரோயினி இருந்தால் தான் படம் வெற்றி அடையும் என்பதை மாற்றி அமைத்தவர். இவர் படங்களில் பெரிய அளவு வசூல் சாதனை செய்யாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரையும், நம்பிக்கையையும் பெற்று உள்ளவர். மேலும், பாலா படம் என்றாலே சூப்பராக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார். மேலும், அதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. மேலும், பாலா அவர்கள் பொதுவாக சினிமா துறையில் மிக கோபமாக, டெரராக இருப்பார் என்று தான் அனைவரும் சொல்வார்கள்.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்

ஆனால், இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் நகைச் சுவையான மனிதர் என்று அவருடைய நண்பர்கள் சொல்வார்கள். இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகளையும், 13 மாநில விருதுகளையும், 15 பிலிம்பேர் விருதுகளையும், 14 உலக அளவிலான விருதுகளையும் பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் பாலா அவர்கள் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி முதுமலர் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

Advertisement