ரஞ்சித் வந்த பிறகு தான் தமிழ் சினிமா இப்படி ஆகி இருக்கு – பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல்

0
302
- Advertisement -

பிகே ரோஸி திரைப்பட விழாவில் பா ரஞ்சித் குறித்து பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. மேலும், இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலாஜி சக்திவேல், இந்த திரை துறையில் பா ரஞ்சித் நுழைவதற்கு முன்னர் இருந்த சினிமாவிற்கும் இப்போது இருக்கும் சினிமாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவர் எடுத்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிக அளவில் தாக்கத்தையும், அதிர்வலையையும் அழுத்தமாக படைப்புகளையும் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

பிகே ரோஸி திரைப்பட விழா:

அவருடைய இந்த வருகை இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல அற்புதமான படைப்புகளையும், புதுமுக இயக்குனர்களையும் தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்திருக்கிறார். தன்னுடைய கலை சேவையை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரிய ஒன்று.

விழாவில் இயக்குனர் சொன்னது:

இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் நூலகம், வானம் நிகழ்ச்சி மூலம் வரும் தலைமுறைகளுக்கு உதவும் வகையில் கலைக்கு சேவை செய்து வருகிறார். அவருடைய இந்த செயல் மிகப்பெரிய அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வழித்தடமாக இருக்கிறது. இதற்காக இவர் பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். இது போன்ற ஒரு திரைப்பட விழா நடத்துவது என்பது எளிதான விஷயம் கிடையாது. அதே நேரத்தில் படங்களை எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வரும் பா ரஞ்சித் இதுபோன்ற விழாவிற்கு எந்த ஒரு லாபத்தையும் பார்க்காமல் செலவு செய்து வருகிறார்.

-விளம்பரம்-

பா ரஞ்சித் குறித்து சொன்னது:

இதன் மூலம் வரும் தலைமுறையினருக்கு கலைத்துறை மேல் இருக்கும் ஆர்வத்தையும் அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. பா ரஞ்சித் படங்கள் மட்டும் இல்லாமல் அவருடைய தயாரிப்பில் வெளிவந்த படங்கள் கூட இந்த சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பா ரஞ்சித் ரொம்ப கோவக்காரர். அவருடைய கோபத்திற்கு பின்னால் ஒரு அர்த்தம், வலி இருக்கிறது. அதை அவர் தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலம் பேச வைப்பது சாதாரண விஷயம் இல்லை. அதை அவ்வளவு எளிதில் யாராலும் துணிச்சலாக செய்து விட முடியாது என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

பா. ரஞ்சித் குறித்த தகவல்:

சமீபத்தில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த ப்ளூ ஸ்டார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி உட்பட பல நடித்திருக்கிறார்கள். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். இதை அடுத்து மகளிர் தினத்தன்று பெண்மையை போற்றும் வகையில் தாய்மையின் பாசத்தை மையமாக வைத்து பா.ரஞ்சித் தயாரித்த படம் ஜே பேபி. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இந்த படமும் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement