பெண்களே, இளம் பெண்களே – பாதிரியார் விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தன் பாய்ண்ட் பாய்ண்டாக கேட்ட கேள்விகள்.

0
580
- Advertisement -

தக்கலை அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிய 27 பெனடிக்ட் ஆன்றோ பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் காட்டமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ, இவர் தக்கலை அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தன்னிடம் ஆசி வாங்க வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து வந்துள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார் இதனைத் தொடர்ந்து விசாரணைகள் இறங்கிய சைவர்களின் போலீசார் தலைமறைவாக இருந்த ஆன்றோவை தேடி வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த ஆன்றோவை தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் கண்டறிந்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் பேசி பொருளாக இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : –

பெண்களே, இளம் பெண்களே!
நாகர்கோவிலில் ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் 80-க்கும் மேற்பட்ட சிறுமிகளையும், வளர்ந்த பெண்களையும் சீரழித்திருக்கிற செய்தியைக் கேட்டீர்களா?

-விளம்பரம்-

அவன் இன்னும் கைதாகவில்லை. ஊர் ஊராக ஓடித் தப்பிக்கொண்டிருக்கிறான். அவன் கைதாவான், கேவலப்படுவான், தண்டிக்கப்படுவான் என்பது மறுபுறம். இவனால் பாதிக்கப்பட்டப் பெண்கள், சிறுமியர் நிலைமையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

  1. நல்ல குடும்பங்களில் பிறந்து, சாதாரணச் சமூகத்தில் வாழ்கிற நமக்குக் கொஞ்சம் கூடப் பகுத்தறிவு இல்லையா? ஒரு மத போதகர் (ஆலயத் தந்தை) இப்படி அந்தங்கப் படங்களைக் கேட்கும்போதே அவன் தப்பானவன் என்பது தெரியாதா?
  2. உங்களைப் போன்ற பல பெண்களின் படங்கள் இப்போது காவல்துறை கையில். ஊரே பார்த்துக்கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாணங்களை!
  3. உங்களுக்குப் பிடித்தவன் கேட்கிறான் என்பதற்காக உங்கள் அந்தரங்கப் படங்களை அனுப்புவது எவ்வளவு முட்டாள்தனம்! அதிலேயே தெரியவில்லையா அவன் உங்களிடம் எதை ரசிக்கிறான் என்று? உங்களை உண்மையாய் விரும்புபவன், காதலிப்பவன் இப்படிக் கேட்பானா?
  4. நிர்வாணத்தை ரசிப்பவனுக்கு நீங்கள் என்ன, பிறரென்ன? எல்லாம் ஒன்றுதான். அவனுக்குத் தேவை உணர்வைத் தூண்டும் பிம்பங்கள்தானே? உங்களிடம் கேட்பதைப் போலவேதான் எல்லாரிடமும் கேட்டுக்கொண்டிருப்பான் என்பது உங்களால் ஊகிக்க முடியவில்லையா?
  5. தங்களை மட்டும் அவன் ரசிப்பது போல தாங்களாகக் கற்பனை செய்துகொண்டு நிர்வாணப் படங்களை அனுப்பிவிட்டு, இப்போது மாட்டிக்கொண்டு முழிக்கிற பெண்களைப் பாருங்கள். இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது.
  6. 15 வயதுக்குட்பட்ட சிறுமியரின் அறியாமையை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால், அந்தப் பாதிரியார் ஒரு குடும்பத்தில் அம்மா, அவரது மகள், அவரது மருமகள் என மூவரையும் வசியப்படுத்தி இருக்கிறான். இந்த மடமையை எங்கே போய் சொல்வது?
  7. இதற்குக் காரணம், இதைப் போன்றவர்களை கடவுள் போல பார்ப்பது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த மக்களுக்கு அறிவு வரப்போவதில்லை. கடவுள் கடவுள்தான், மனிதன் மனிதன்தான்.இவன் என்ன கடவுளுடைய பிரதிநிதியா?

சாமியார்கள் பின்னாலும், மதத்தலைவர்கள் பின்னாலும் அலைந்தால் இது மட்டுமல்ல, இன்னும் பல அவலங்களைச் சந்திக்கவேண்டி வரும்.

திருந்தித் தொலையுங்கள்!

Advertisement