தன்னுடைய குழந்தை குறித்து முதல் முதலாக மனம் திறந்து நடிகை சரண்யா பாக்கியராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இதற்கிடையில் பாக்கியராஜ், நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம் தான். பாக்யராஜின் மூத்த மகள் சரண்யா. இவர் பாக்யராஜ் இயக்கத்தில் 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திரையுலகில் இருந்து விலகி மேல் படிப்புக்காக வெளிநாடு பறந்தார் சரண்யா.
அதோடு சரண்யா திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் காதல் தோல்வி தான் என்று கூறப்படுகிறது. இவர் தன்னுடைய காதல் தோல்விக்காக மூன்று முறை தற்கொலை செய்ததாகவும், அவரை கஷ்டப்பட்டு காப்பாற்றியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து பாக்கியராஜ், சரண்யா தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமோ, பதிலோ வரவில்லை. அது மட்டும் இல்லாமல் சரண்யா காதலித்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தமிழர் என்று கூறப்படுகிறது. இதனாலே இவர் பாரிஜாதம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது.
சரண்யா பாக்யராஜ் பேட்டி:
இந்த நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் சோசியல் மீடியாவில் முகம் காட்டியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் சரண்யா, நான் சினிமாவில் நடித்த காலகட்டத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். அப்போது ஒரு சில பட வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால், அந்த படங்கள் நான் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால், நான் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் என்னுடைய அப்பாவிற்கு உதவியாக பல படங்களில் வேலை செய்திருந்தேன். அதனால் தான் நடிகையாக தொடர்ந்து என்னால் நடிக்க முடியாமல் போனது.
சினிமா குறித்து சொன்னது :
நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே நினைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்த ஒரே தொழில் சினிமா தான். ஆனால், சரியான வாய்ப்புகள் வராததால் தான் என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. மீண்டும் தமிழில் நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கும் சாந்தனுக்கும் ஒன்றை வயசு தான் வித்தியாசம். அதனால் நாங்கள் அக்கா- தம்பி போல பேசிக்கொள்ள மாட்டோம், நண்பர்கள் போல தான் பழகுவோம். அதே நேரம் சாந்தனுடைய படங்களை பற்றி எதுவாக இருந்தாலும் நேரடியாகவே சொல்லிவிடுவேன்.
தன் குழந்தை குறித்து சொன்னது:
அவருடைய ப்ளூ ஸ்டார் படம் நன்றாக இருந்தது. சில நேரங்களில் அவருக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்க சொல்லுவார். அதே போல் என்னுடைய குழந்தையையும் பார்த்துக் கொண்டு காஸ்டியூம் டிசைனர் வேலையும் பார்ப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படி எங்களை வளர்த்தார் என்பதை இப்போதுதான் புரிகிறது. என்னுடைய குடும்பத்தினர் அனைத்து விஷயங்களிலும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார்கள். நான் புதிய தாயாக இருந்தாலும் எனக்கான ஸ்பேஸ், தூங்கும் நேரம் எல்லாமே கிடைக்கிறது. குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் வேறொரு விஷயத்தில் கவனத்தை செலுத்தினால் மன அழுத்தம் குறையும் என்பது என்னுடைய கருத்து.
நெட்டிசன்கள் கேள்வி:
நானும் அதைத்தான் செய்தேன். என்னுடைய குழந்தையை வைத்துக்கொண்டு வேலை செய்வதால் சில சமயங்களில் குழந்தை பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. நான் எப்போதும் என்னுடைய குழந்தையை பற்றி தான் யோசிப்பேன். திடீரென்று ஓடிவந்து குழந்தையை பார்த்து விட்டு வருவேன். என்னுடைய குழந்தை தான் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்திருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி சரண்யா அளித்திருந்த பேட்டி பலருக்குமே ஷாக்காகத்தான் இருக்கிறது. சரண்யாவின் திருமணம் எப்போது நடந்தது? அவருடைய கணவர் யார்? உண்மையாலுமே சரண்யாவுக்கு குழந்தையா? அவர் தத்து எடுத்து வளர்க்கிறாரா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.