படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அடி, 20 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் பாரதி ராஜா பட நடிகர்.

0
96449
bharathi
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சில நடிகர் நடிகைகளின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. நிலை கெட்டப்போய் உயிரை காப்பாற்ற மக்களிடம் கெஞ்சிய பல நடிகர்களின் வீடியோக்கள் கூட நாம் கண்டிருப்போம். அவ்வளவு ஏன் கடந்த ஆண்டு பறவை முனியம்மா துவங்கி சமீபத்தில் உயிரிழந்த நடிகர் தவசி வரை எத்தனையோ சினிமா பிரபலங்கள் மக்களிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டனர்.

-விளம்பரம்-

அவர்களுக்கு மக்களும் சினிமா பிரபலங்கள் உதவி செய்தும் கூட அவர்கள் உயிர் பிரிந்தது தான் சோகம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர் பாபுவும் இப்படி ஒரு அவள நிலையை சந்தித்து இருக்கிறார். கிராமத்து மண் வாசனை மாறாமல் படம் எடுக்கும் பாரதி ராஜா அறிமுகம் செய்த எத்தனையோ நடிகர் நடிகைகளில் நடிகர் பாபுவும் ஒருவர் தான்.

- Advertisement -

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.இந்த படத்தில்  அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தவர். “என் உயிர்த் தோழன்” படத்திற்கு பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

14 படங்களில் ஒப்பந்தமானாலும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்தார். அதற்கு காரணம் “மனசார வாழ்த்துங்களேன்” படத்தில் நடித்தபோதுஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. அதன் பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையானநடிகர் பாபு , கடந்த 20 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். 

-விளம்பரம்-

தற்போது வரை மருத்துவமனையில் படுத்த படுகையாக இருந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண் கலங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. 

Advertisement