தனது மகன் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய இயக்குனரிடமே தனது மகனுக்கு வேலை கேட்டுள்ள நாகேஷ் .

0
28113
nagesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகிற்கு நகைச்சுவை ஒன்றை கொண்டு வந்தவர் நாகேஷ். இவருடைய நடிப்பு மூலம் தான் சினிமாவில் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. காலம் கடந்தாலும் நாகேஷின் நகைச்சுவையும், ஞாபகங்களும் என்றும் மக்கள் மனதை விட்டு நீங்காது. ஜனவரி 31ஆம் தேதி நாகேஷ் அவர்களின் நினைவு நாள். மாபெரும் திறமை மிக்க மனிதனை இந்த தமிழ் சினிமாவுலகம் இழந்து உள்ளது என்று சொல்லலாம். இந்நிலையில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நாகேஷ் உடன் இருந்த அனுபவங்களைக் குறித்து இயக்குனர் சரண் அவர்கள் பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியது, நான் முதலில் கே.பி. சார் கிட்ட உதவி இயக்குனராக இருந்தேன். அவர் டயலாக் பேப்பரை எல்லாம் என் கையில் கொடுத்து தான் நடிகர்களுக்கு வசனங்களை சொல்லிக் கொடுக்க சொல்வார்.

-விளம்பரம்-
இயக்குநர் சரண் - நாகேஷ்

- Advertisement -

நான் எந்த எந்த டயலாக் கொடுத்தாலும் அதை நாகேஸ் சார் பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்ப்பேன். அதை தான் நான் நடிகர்களுக்கும் அப்படியே சொல்லிக் கொடுப்பேன். இப்படி என்னுடைய எல்லா நேரங்களிலும் குருவாக இருந்தது நாகேஷ் சார் தான். அவருடன் இருக்கும் போது நம்மை சுற்றி பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்து கிட்டே இருக்கும். இது என்னுடைய நம்பிக்கை. ஒரு முறை நாகேஷ் சார் அவருடைய பையனை உன்கிட்ட உதவி இயக்குனராக சேர்த்துக் கொள் என்று கேபி சார் போனில் என்னிடம் சொன்னார். நாகேஷ் சார் பையன் தான் ஏற்கனவே ஹீரோ ஆகிட்டாரே, வேற யாரா இருக்கும் என்று நான் யோசித்தேன்.

அப்புறம் தான் அவர் ஆனந்த்பாபுவை சொல்லியிருக்கார் என்று தெரிந்தது. எனக்கு இது ஆச்சரியமாகவும் இருந்தது.ஏன்னா, ஆனந்த்பாபு ஹீரோவாக நடித்த வானமே இல்லை படத்துக்கு நான் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன். ஆனந்த்பாபுவுக்கு நடுவில் எந்த படமும் சரியாக அமையவில்லை. அவர் கிரியேட்டிவாக வரணும் என்று தான் உன்கிட்ட வேலை பார்க்க நாகேஷ் சார் கேட்டு இருக்காரு என்று கேபி சார் என்னிடம் சொன்னார். அப்ப எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாத மனநிலையில் இருந்தேன். பின் இதய திருடன் படத்தில் இரண்டாவது செட்டில் என்கூட ரொம்ப ஆர்வமாக வேலை பார்த்தார் ஆனந்த்பாபு. என்னை நம்பி அவருடைய பையனை அனுப்பி வைத்தார். இப்ப நினைத்தாலும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

-விளம்பரம்-
`` `இன்னுமாடா கமல்  அந்தக்  கோழி சாகலை'னு கேட்பார்  நாகேஷ் சார்!" - சரண்

சினிமாவில் இரண்டு லெஜென்ட்டுகளான கமல் சார், நாகேஷ் சார் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் என் கூட இருந்தார்கள். சொல்லப்போனால் எனக்கு இவங்க ரெண்டு பேரையும் வைத்து நான் தான் இயக்குகிறேனா! என்ற ஆச்சரியமும், சந்தோசமும் இருந்தது. இந்த படத்தில் நாகேஷ் சார் உடன் பண்ணனும் போது எனக்கு பெருமையாக இருந்தது. அவரும் நடிச்சிட்டு இது ஓகேவா, இன்னும் வேற ஏதாச்சு பண்ணனுமா என்று கேட்பார். மேலும், நாகேஷ் சார் கேட்டு கேட்டு என் மனசுக்கு திருப்தியாக நடித்துக் கொடுத்தார். நானும் அவர் நடிப்பதை ரசித்துக் கொண்டு இருப்பேன்.

ஏனென்றால் சின்ன வயதிலிருந்தே எனக்கு நாகேஷ் சார் மீது அவ்வளவு ஈர்ப்பு. அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும் என்ற என் பல நாள் கனவு இந்த படத்தில் நிறைவேறியது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன். நான் இந்த அளவிற்கு என் வாழ்க்கையில் முன்னேறி இருப்பதற்கு காரணம் கே.பி.சார், நாகேஷ் சார் தான். ஒரு நாள் ஷூட்டிங்கில் போக்கை வைத்து கமல் சார் சிக்கனை குத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நாகேஷ் அவர்கள் இன்னும் அந்த கோழி சாகாமல் இருக்கா என்று கேட்டார். இப்படி அவர் சின்ன சின்ன விஷயத்திலும் அவர் பண்ணும் நகைச்சுவை இன்னமும் மறக்க முடியாது. இன்று வரை அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ஆனந்த கண்ணீருடன் இயக்குனர் சரன் கூறினார்.

Advertisement