தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள். பின் தேர்தலின் முடிவில் எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது.

இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதை அடுத்து பெரும்பான்மையாக 120 எம் எல் ஏக்கள் உயர்ந்துள்ளது. பின் சில தினங்களுக்கு முன் தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆளுநர் அவர்கள் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற உடனே விஜய் அவர்கள் மூன்று கோப்புகளில் கையெழுத்தும் போட்டு இருக்கிறார். அதோடு பதவி ஏற்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
விஜய் அரசியல்:
அதற்கு பிறகு முதலமைச்சர் விஜய் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்லியிருந்தார். தற்போது இது பேசும் பொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் சேரன், மரியாதைக்குரிய மக்களே, அனைத்து மக்களையும் சேர்த்து தான். கட்சி பேதமின்றி சொல்கிறேன். நீண்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவரை நம்பி ஒரு பகுதி மக்கள் முதல்வர் என வாக்களித்து மறுப்பகுதி மக்கள் அதற்கு ஆதரவும் தந்து முதல்வர் நாற்காலியில் அமர
வைத்தும் ஆகிவிட்டது.

சேரன் பதிவு:
மக்களும் புதியவர்கள் வேண்டும் என்று தெரிந்து தான் இந்த வாக்கு அளித்திருக்கிறார்கள். பதவி பிரமாணம் முடிந்த உடனே விமர்சனங்கள் முன் வைக்காமல் வாழ்த்திவிட்டு அமைதி காப்பது தான் நல்லது. அதற்குள் தமிழ் தாய் பின்னால் போய்விட்டது. 200 யூனிட் கரண்ட் என்னாச்சு? என்று முழங்காமல் கொஞ்சம் வேலை செய்ய விடலாம். தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் விஜய் போட சொல்லி இருப்பாரா? 200 யூனிட் ஃப்ரீ? என்பதில் என்ன குளறுபடி. இதெல்லாம் முதல் நாளிலேயே கேட்கலாமே. அவர்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் முறையாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். விஜய் முழுக்க முழுக்க புதியவர்.

விமர்சனம் பற்றி சொன்னது:
அவருக்கு இந்த அரசியல் சட்ட திட்டங்கள் நுணுக்கமாக புரிய கொஞ்ச நாட்கள் பொறுத்திருங்கள். அவர் புரிந்து நன்றாக செயல்பட்டு விட்டால் நல்லது தானே. அப்படி இல்லை என்றால் மக்கள் புரிந்து கொண்டு மாற்றி விடுவார்கள். இதை நான் யாருக்கும் ஆதரவாக சொல்லவில்லை. உடனே விஜய்க்கு ஜால்ரா போடுகிறேன் என்று சொல்லக்கூடாது. விருப்பு வெறுப்புகளை துறந்து பொதுவான ஒரு அமைதியான சமூகம் உருவாக வழி அமைப்போம். அதற்கு தான் இந்த பதிவு போடுகிறேன். முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல சமுதாயக் கட்டமைப்பை உருவாக்க உங்கள் அர்ப்பணிப்பை தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.






