விஜயின் புலி படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் என்று இயக்குனர் சிம்புதேவன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூயையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த புலி படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.

இருந்தாலும், இந்த படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய், சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, தம்பி ராமையா, சத்யன், நந்திதா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின் புலி படம் தோல்வி குறித்து சிம்பு தேவன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சிம்புதேவன் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் முதன் முதலாக சேரனிடம் உதவி இயக்குனராக இருந்தார்.
சிம்புதேவன் குறித்த தகவல்
அதற்குப் பிறகுதான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவியாளர் இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு அவருடைய தயாரிப்பிலேயே தன்னுடைய முதல் படமான 'இம்சை அரசன் 23' ஆம் புலிகேசியில் நடிகர் வடிவேலுவை வைத்து இயக்கி இருந்தார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அதற்குப் பின் இவர் 'அறை எண் 305-ல் கடவுள்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் போட்.
https://www.youtube.com/watch?v=wg5o2aevJ24
சிம்புதேவன் பேட்டி:
இந்த படத்தில் யோகி பாபு, கௌரி கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கூடிய விரைவிலேயே வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்புதேவன், புலி படத்தில் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். இருந்தாலுமே அந்த சமயத்தில் ரெயிடு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் படம் வெளியாகியும் விமர்சனங்களை சந்தித்து இருந்தது.
புலி படம் தோல்விக்கு காரணம்:
இம்சை அரசன் படம் குழந்தைகளுக்கான ஃபேவரைட் படம். இதைப்போலத்தான் புலி படத்தையும் எடுத்திருந்தோம். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரத் தவறி விட்டது. ஆனால் டிவியில் புலி படத்தை எப்போது ஒளிபரப்பு செய்திருந்தாலும் பல பேர் போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். ஒரு படத்தை வெற்றி படமாகவே கொடுக்க முடியாது. ஆடியன்ஸ் பார்க்கிற வரை அந்த படத்தினுடைய ரிசல்ட் தீர்மானிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

விஜய் திரைப்பயணம்:
கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 'லியோ' படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தினுடைய வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து கடைசியாக விஜய் 'தளபதி 69' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.






