தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக ரியோ ராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ஜோ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் ஸ்வீட் ஹார்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தான் தயாரித்து இருக்கிறார்.

அதோடு இந்த படத்திற்கு யுவனே இசை அமைத்தும் இருக்கிறார். இந்த படத்தில் கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் மார்ச் 14ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று இருந்தது.இதில் பட குழுவினருடன் தேசிங்கு பெரியசாமி, இளன், பொன்ராம் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய தேசிங்கு பெரியசாமி, ஸ்வீட் ஹார்ட் டைட்டிலே ரொம்ப யூத்புல்லா இருக்கு. படத்தினுடைய ட்ரெய்லரும் ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.
தேசிங்கு பெரியசாமி:
ரியோவின் கலர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அது நம்ம ஊரோட கலர். யுவன் சாருக்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். எஸ்டிஆர் 50 படம் நடப்பதற்கு முக்கிய காரணமே யுவன் சார் தான். நான் யுவன் சாரிடம் கதை சொன்னேன். அவர் பதில் எதுவுமே கேட்காமல் எப்போ வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சிம்பு சாருக்கு கால் பண்ணி பேசி ஒரு ஊக்கமும் கொடுத்தார். கிட்டத்தட்ட சிம்பு சார் எஸ்டிஆர் 50 படத்தை ட்ராப் பண்ணிடலாம் என்று இருந்தார். ஆனால், யுவன் சங்கர் சார் கொடுத்த ஊக்கத்தால்தான் அந்த படம் மீண்டும் நடக்கிறது. எங்களுக்கு அவர் ஒரு தெம்பாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

சிம்பு குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=nivqluWvGG4
சிம்பு கம்பேக்:
சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அந்த வகையில் சிம்பு நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இது சிம்புவின் 48வது படம். இதை அடுத்து சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

சிம்பு படங்கள்:
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இதை அடுத்து சிம்புவின் 50ஆவது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை நீண்ட நாட்களாகவே எந்த அறிவிப்பும் இல்லாமல் வைத்திருந்தார்கள். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இந்த படத்தை சிம்புவே தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- சிம்பு கூட்டணியில் இந்த படம் உருவாகிறது. இது முழுக்க முழுக்க சரித்திர கதைகளம் என்று கூறப்படுகிறது.






