கொரோனா லாக் டவுன்- தன் மகனுக்கு தானே முடி வெட்டிய தூங்காநகரம் பட நடிகர். வைரலாகும் புகைப்படம்.

0
2453
thunganagaram
- Advertisement -

கொரோனா வைரஸினால் ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தின் விளிம்பில் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய அரசாங்கம், மருத்துவர்கள், காவல்த்துறை என அனைத்தும் போராடி வருகிறது. கொரோனா வைரசினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை 1251 பேர் பாதிக்கப்பட்டும், 32 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தலை தூக்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் கடைகள்,பொது இடங்கள், போக்குவரத்துகள், சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

- Advertisement -

இதனால் மக்கள் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, பெயிண்டிங், ஜோக்ஸ், டிக் டாக்,சமையல் என ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். தூங்காநகரம், சிகரம் தொடு போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கெளரவ் நாராயணன்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ‘டைரக்டர்ஸ் கட், பிஸி வித் சஞ்சித்’ என்று பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இது தான் டைரக்டர்ஸ் கட்டா? என்றும், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும்,சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனவினால் உலக மக்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் கவலையில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கை உடன் இருப்பது மட்டும் தான்.

தமிழ் சினிமா உலகில் பரிட்சயமான இயக்குனர்களில் கெளரவ் நாராயணனும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும், நடிகரும் ஆவார். இவர் தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை கொடுத்து உள்ளார். இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இப்படை வெல்லும் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement