அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் காலமானார். படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய அஜித்.

0
30798
ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்களை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் கொல்லுபுடி மாருதி ராவ் அவர்கள் இன்று(டிசம்பர் 12) சென்னையில் உயிரிழந்து உள்ளார். இதனால் திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது என்ற தகவல் வெளியானது. தெலுங்கில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பிரேம புஸ்தகம். பிரேம புஸ்தகம் படத்தை இயக்கியவர் கொல்லுபுடி மாருதி ராவ். இந்த படத்தின் மூலம் தான் தல அஜித் குமார் அவர்கள் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும், தெலுங்கில் அவருக்கு இதுவே முதல் மற்றும் கடைசி திரைப் படம் ஆகும். இந்த படத்திற்கு பிறகு தான் தல அஜித் அவர்களுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு தல அஜித் அவர்கள் தமிழ் படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for gollapudi maruti rao

- Advertisement -

இயக்குனர் கொல்லுபுடி மாருதி ராவ் அவர்கள் 1939ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர். இவர் தெலுங்கில் மட்டும் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவருடன் நடிப்புக்கு ஆறு முறை நந்தி விருதுகளை வாங்கி உள்ளார்.பிரேம புஸ்தகம் படத்தை இயக்கிய இயக்குனர் கொல்லுபுடி மாருதி ராவ் அவர்கள் சினிமா உலகில் சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடிகர் என பல முகங்களைக் கொண்டவர். தமிழில் இவர் சிப்பிக்குள் முத்து, இஞ்சி இடுப்பழகி போன்ற பல படங்களில் இவர் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : ரஜினி பிறந்தநாளுக்கு சச்சின் டிவீட்டல் கடுப்பான ரஜனி ரசிகர்கள். பின்னர் சச்சின் செய்த டீவீட்டை பாருங்க.

தற்போது இவருக்கு 80 வயது ஆகிறது. சமீப காலமாகவே இவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பின் இவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பின் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையும் அளித்து வந்தார்கள். ஆனால், அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் போனதால் இன்று உயிரிழந்து உள்ளார். இவரின் மரணம் ஒட்டு மொத்த திரை உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், இவர் குடும்பத்தினருக்கு சினிமா பிரபலங்கள் இரங்களையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். அதோடு ரசிகர்களும் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Related image
அஜித் அறிமுகமான பிரேமா புஸ்தகம்

தல அஜித் அவர்கள் சினிமாவில் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் ஆனவர்களும் இவரும் ஒருவர். இதனால் அஜித் வலிமை படத்தின் கிளம்பியதாக கூறப்படுகிறது. அஜித் அவர்கள் எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் வந்தவர். மேலும், தன்னுடைய கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அஜித் அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் அளவு ஹிட்டு கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது அஜித் குமார் அவர்கள் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். அதோடு நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய குழுவே தான் வலிமை படத்தையும் இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் அதுவும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தெரிய வந்து உள்ளது.

Advertisement