சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் படமாக எடுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் போதிலும் காஷ்மீரை கதைக்களமாக கொண்டிருந்த அமரன் திரைப்படம் அரசியல் ரீதியாக விமர்சனங்களைச் சந்தித்தது.
அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் மேஜர் முகுந்த் ஒரு ஐயங்கார் என்பதை காட்டா மறுத்துள்ளதாக எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மதுவந்தி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக அறம் பட இயக்குனர் இயக்குநர் கோபி நயினார் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அமரன் படம்:
அதில் ‘சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தேன்.சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது.
கோபி நயினார் பதிவு:
ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார்,
காஸ்மீர் மக்கள் குறித்து:
அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.
படம் குறித்து சொன்னது:
இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு.” என்று பதிவு செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.