ஜீவாவின் ‘பிளாக்’ ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? – ‘கோஹரென்ஸ்’ இயக்குநர் கொடுத்த நச் பதில்

0
158
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழும் ஜீவாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் பிளாக். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கே.ஜி பாலசுப்பிரமணி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தில் சென்னையில் உப்பளப்பாக்கம் பகுதியில் வாங்கி இருக்கும் தங்களுடைய புதிய வீட்டிற்கு ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதியினர் வருகிறார்கள்.

-விளம்பரம்-

இது கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடு. இவர்கள் தங்களுடைய விடுமுறை நேரத்தை செலவிட வருகிறார்கள். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. ஆனால், யாருமே இந்த வீட்டில் குடியேறவில்லை. பின் இங்கு பல மர்மமான நிகழ்வுகள் நடக்கிறது. உடனே அந்த இடத்தை விடுத்து தப்பித்து செல்லலாம் என இருவருமே நினைக்கிறார்கள். ஆனாலும், ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் இருவரும் வருகிறார்கள்.

- Advertisement -

ப்ளாக் படம்:

அவர்களைப் போலவே சில உருவங்களும் அங்கே உலவி கொண்டிருக்கின்றது. இறுதியில் அந்த இடத்தில் இருந்து ஜீவா- பிரியா பவானி சங்கர் தம்பதி தப்பித்தார்களா? இதற்கு காரணம் என்ன? அந்த வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க 2013ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான `கோஹரன்ஸ்’ என்ற படத்தின் உடைய ரீமேக் தான். சில மாற்றங்களுடன் இந்த படத்தை தமிழில் இயக்குனர் வெளியிட்டு இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான மிரட்டும் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தின் மொத்த கதையுமே ஜீவா தாங்கி சென்றிருக்கிறது. பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஹாலிவுட் படங்கள் ரேஞ்சுக்கு சில காட்சிகள் இருக்கிறது. மூன்று காலக்கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்து காண்பித்து இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. சுவாரசியமான கதையை சயின்ஸ் பிக்சனாக இயக்குனர் காண்பிக்க முயற்சிப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

-விளம்பரம்-

படம் குறித்த சர்ச்சை:

அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவாவிற்கு இந்த படம் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் ‘Coherence’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. ஆனால், இது குறித்து படக்குழுவின் எதையும் சொல்லவில்லை.

இயக்குனர் ஜேம்ஸ் வார்ட் பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் இயக்குனர் ஜேம்ஸ் வார்ட் பைர்கிட்டிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு அவர், சில ஆதாரங்களின்படி இது ‘Coherence’ படத்தை மையமாகக் கொண்டது என்பது தெரிகிறது. தமிழில் இந்த படத்தை தயாரித்த நிறுவனத்தை எனக்கு தெரியாது. இருந்தாலும் கோட்பாட்டளவில் அவர்கள் முறையான உரிமையை பெற்றிருப்பது தான் சாத்தியம் என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், அவர்கள் என்னை பிரீமியருக்கு அழைத்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement