இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி பேட்ட படத்தில் நடித்துள்ளாரா ? வைரலாகும் புகைப்படம்.

0
11215
karthiksubbaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜூம் ஒருவர். சினிமா உலகில் நுழைந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் இயக்குனர் ஆனார். இவர் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தனது பள்ளிப் படிப்பை மதுரையிலும், கல்லூரி படிப்பை திருப்பரங்குன்றத்திலும் முடித்தார். இவர் திரையுலகிற்கு வரும் முன்னர் பல்வேறு குறும் படங்களை இயக்கியுள்ளார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறும்பட போட்டி நாளைய இயக்குனர் தொடரில் காட்சிப்பிழை, ராவணம், துரு, வி, நீர் என பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதற்கு பிறகு தான் இவர் வெள்ளித்திரையில் இயக்குனர் ஆனார்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர் 2012-ம் ஆண்டு குறைவான பட்ஜெட்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் திகில் மற்றும் திரில்லர் பாணியில் இருந்தது. இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக இயக்குனர் என்ற விருதினை பெற்று உள்ளார். இந்த பீட்ஸா படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

பீட்ஸா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் 2014 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்தை வைத்து ஜிகர்த்தண்டா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இறைவி, மெர்குரி ஆகிய படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். மேலும், இவர் 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படம் கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசி குமார், மேகா ஆகாஷ் என்று பலர் நடித்திருந்தனர். பேட்ட படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ், அவரது மனைவி, மற்றும் அவரது குழந்தை உள்ளார்கள். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து பலர் கார்த்திக் சுப்புராஜ்ஜூக்கு இவ்வளவு அழகான குடும்பமா?? என்று கேட்டு வருகிறார்கள். மேலும், பேட்ட படத்தில் ஒரு காட்சியில் ஹாஸ்டர் வார்டனாக ரஜினி சேரும்போது அவரிடம் ஒரு பெண் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுப்பார். அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் மனைவி

பேட்ட படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனுஷை வைத்து படம் இயக்கி உள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படமும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படமும் உருவாகி வருகிறது.

Advertisement