ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாறி மாறி பதிவிட்ட தல தளபதி இயக்குனர்கள்.

0
686
loki

தமிழ் சினிமாவில் தங்களது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் மிகவும் குறைவு தான். அந்த லிஸ்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், எச் வினோத்திற்கு நிச்சயம் இடம் உண்டு. மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜிற்கு தனது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து இவருக்கு கார்த்தியின் கைதி படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி அதனையும் வெற்றிப்படமாக அமைத்தார் லோகேஷ் கனகராஜ்.

அதே போல ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச் வினோத்தும் தனது முதல் படத்திலேயே பலரால் கவனிக்கப்பட்டார். லோகேஷ் கனகராஜ் போன்றே இவரும் தனது இரண்டாவது படத்தை கார்த்தி வைத்து தான் இயக்கினார். இவரது இரண்டாம் படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் அஜிதை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி இருந்த நிலையில் தற்போது வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வலிமை பட இயக்குனர் எச் வினோத்தும் , மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதில் லோகேஷ் கனகராஜ் ‘பல ஆண்டுகள் கழித்து வினோத் அண்ணாவுடன் அழகான தருணம்’ என்றும் எச் வினோத் லோகேஷுடன் என்று பதிவிட்டு வலிமை படத்தின் ஹேஷ் டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்..

இது ஒருபுறம் இருக்க லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அதே போல எச் வினோத்தின் வலிமை திரைப்படத்தின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த மாத இறுதியில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement