லியோ 2 கதை ரெடி, லோகேஷ் கொடுத்த அதிரடி அப்டேட் – அப்போ ஹீரோவா யார் நடிப்பா?

0
55
- Advertisement -

லியோ 2 குறித்து லோகேஷ் அளித்த பேட்டி தான் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கிறார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் லியோ 2 படம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

லியோ 2 குறித்து சொன்னது:

அதற்கு லோகேஷ், விஜய் உடைய எதிர்கால திட்டங்கள் ரொம்ப உயர்வானது. லியோ 2 படத்திற்கான கதை ரெடியாக தான் இருக்கிறது. விஜய் சார் ஓகே சொல்லிவிட்டால் ஆரம்பிக்கலாம். லியோவில் சொல்லாத பல கதைகள் லியோ இரண்டாம் பாகத்தில் வரும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோட் படம்:

தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபுவின் கோட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய், தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இது தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால் இவர் மேற்கொண்டு நடிப்பாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-

லோகேஷ் குறித்த தகவல்:

ஆரம்பத்தில் லோகேஷ் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து இருந்தார். பின் இவருக்கு சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற குறும்படத்தின் மூலம் தான் தொடங்கினார். அதன் பின் இவர் “மாநகரம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார்.

லோகேஷ் திரைப்பயணம்:

அதன் பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்தார் லோகேஷ். லியோ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார் லோகேஷ். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் தான் ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருந்தார்கள். அந்த பாடல் வெளியாகி காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதை தொடர்ந்து இவர் கைதி 2 படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement