லோகேஷ் கனகராஜின் எமோஷனல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி படம்:
இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் ரஜினி பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அதன் பின் கூலி படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், டைம் ட்ராவல் மையப்படுத்திய கதை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் சோசியல் மீடியாவில் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய தொழில் வாழ்க்கையில் முதல் நாள் முதல் இன்று வரை எனக்கு தூணாக இருந்தவர்களை பற்றி சொல்ல இதுவே சரியான தருணம். அவர்கள் தான் அன்பறிவு. நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னை பார்க்க அவர்கள் எப்போதுமே விரும்பினார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்கள் எப்போதும் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அதற்காக உங்கள் இருவருக்குமே நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இயக்குனர்கள் ஆகுவதை பார்க்க நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். உங்களை என்றும் நேசிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அன்பறிவு குறித்த தகவல்:
மேலும் தக் லைப் படத்திற்கு பிறகு கமலஹாசனுடைய 237 வது படத்தை ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பு அறிவு தான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கே ஜி எஃப் தொடங்கி லியோ, தசரா, rtx, சலார், அயலான் போன்ற பல வெற்றி படங்களில் சண்டை காட்சிகளை அன்பறிவு தான் இயக்கியிருக்கிறார்கள். இவர்கள் தற்போது இயக்குனர்களாக இயக்கம் இந்த முதல் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.






