இயக்குனர் ராஜேஷ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்த துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சீரன். இந்த படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், ஆரியன், அருந்ததி நாயர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஜேம்ஸ் கார்த்திக், எம். நியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற நான்காம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது விழாவில் கலந்து கொண்ட பிரதர் படத்தினுடைய இயக்குனர் ராஜேஷ், மெக்கமிஷின் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பாடலை பால் டப்பா என்பவர் தான் எழுதி இருக்கிறார். இவரை படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே எல்லோரையும் பார்த்து ஹாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
பால் டப்பா செய்த வேலை:
பாடல் ஆசிரியர்களுமே கண்டிப்பாக இசை வெளியீட்டு விழாவிற்கு வரணும் என்று நகைச்சுவையாக பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. இதை பார்த்த பலருமே பாடல் ஆசிரியர் பால்டப்பாவை விமர்சித்தும் ட்ரோல் செய்தும் இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் ராஜேஷ் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=gQMzk5w_0IY
இயக்குனர் வீடியோ:
அதில் அவர், என்னுடைய பேச்சை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் விளையாட்டாக தான் அதை சொன்னேன். பிரதர் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவுக்கு பாடலாசிரியர் பால் டப்பாவை அழைத்து அவரை மேடையில் ஏற்றி அவருக்கான மரியாதையும், அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். காரணம், அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.
View this post on Instagram
விழாவில் பேச காரணம்:
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் அவர் மேடையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதுபோல மேடை கிடைக்க எவ்வளவோ பேர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு அன்று வேறொரு நிகழ்ச்சி இருந்ததால் வர முடியாத சூழல் இருந்தது. இருந்தமே அவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து எல்லோரிடமும் பேசிவிட்டு தான் சென்றார்.
வருத்தம் சொல்ல காரணம்:
அப்போது எனக்கு அவர் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற விஷயம் தெரியாது. அதற்குப் பிறகுதான் சமீபத்தில் நடந்த சீரன் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதனால் தான் தீரன் விழாவில் அப்படி பேசி இருந்தேன். அதற்கு பிறகு தான் அவர் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற விஷயம் எனக்கு தெரிந்தது. அதை தொடர்ந்து அவரிடமும் நான் அதைப் பற்றி பேசி வருத்தமும் தெரிவித்தேன் என்று கூறியிருக்கிறார்.






