'விடாமுயற்சி' படம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில், ரோகாந்த் இயக்கிய ' யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்துல நடிப்பதற்காக, நான் பழனிக்குப் போயிருந்தேன். அப்போ சுரேஷ் சந்திரா, 'அஜித் சாருக்கு கதையை வச்சிருக்கீங்களா? ' என்று கேட்டார். பிறகு 'கலகத் தலைவன்' படம் முடிஞ்சு ரெண்டு வாரம் கழிச்சு அஜித் சாரை மீட் பண்ணேன்.
மகிழ் திருமேனி பேட்டி:
அவர் சொன்ன முதல் வார்த்தை, ' என்னை கண் மூடித் தனமா நம்புங்க மகிழ்' என்றுதான். இந்தக் கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சார் நடிப்பில் பண்ண நினைத்தது, ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார் தான் சொன்னார். அவருடைய இமேஜுக்கு இந்தப் படத்துல அவர் பண்ணி இருக்கிற கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை. ரசிகர்கள் எதையும் எதிர்பார்த்து வர வேண்டாம். அஜித் சார் தான் இப்படி படம் பண்ணனும்னு ஆசைப்பட்டார். அவர் இப்ப இருக்கிற பிம்பத்துக்கு முற்றிலும் முரண்பாடாக இந்தப் படம் இருக்கும்.

ஹாலிவுட் படம் ரீமேக்கா? :
மேலும், இப்படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா என்று நான் இப்போ சொல்ல முடியாது. ஆனால், இது என் கதை இல்லைன்னு சொல்ல முடியும். இது ஒரு பயணம் தொடர்பான கதை. கணவன்-மனைவியோட பயணம். அதற்கு இடையில் நடக்கிற சம்பவங்கள்தான் படத்தின் கதை. இதுக்குள்ள ஆக்சன், கார் ரேசிங், சஸ்பென்ஸ், திரில்லிங் விஷயங்கள் எல்லாமே இருக்கும். ஆனா, எதார்த்தத்துக்கு நெருக்கமாக தான் இருக்கும். அஜித் சார் மனைவியா இந்த படத்தில் த்ரிஷா நடிச்சிருக்காங்க.
அஜர்பைஜானில் படப்பிடிப்பு குறித்து:
அதோடு இந்த கதைக்குப் பெரிய திறந்தவெளி வேணும். நீண்ட தூர, ஆளரவமற்ற சாலைகள் வேணும். அஜித் சார் நடித்த கடந்த இரண்டு மூணு படங்கள் ஸ்டூடியோவுக்கு உள்ளதான் எடுக்கப்பட்டது. அதனால, பிரம்மாண்டமான ஒரு லேண்ட்ஸ்கேப்பை காட்ற கதைக்களம் அமையனும்னு அவர் ஆசைப்பட்டார். அதுக்கு பொருத்தமோ அவர் தேர்வு செய்ததுதான் அஜர்பைஜான். நான் எழுதும்போது அபுதாபியை மனசுல வச்சுத்தான் எழுதினேன். அங்க எங்களுக்கு சில சிக்கல்கள் இருந்தது. அதனால தயாரிப்பு தரப்புல இருந்து, அஜர்பைஜான் போகலாம்னு சொன்னாங்க.

அஜித் -அர்ஜுன் காம்போ:
இந்த கதைக்கு ரொம்ப பொருத்தமான லொகேஷன் ஆக அஜர்பைஜான் இருந்தது. அஜித்தும், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனும் ஏற்கனவே 'மங்காத்தா' படத்துல மிரட்டி இருப்பாங்க. அதே மாதிரி இந்த படத்துல ரெண்டு பேருமே சந்தேகமே இல்லாம சிறந்த நடிகர்கள். அவர்களுக்குள்ள நடக்கிற உரையாடல்கள், மோதிக்கிற தருணங்கள் எல்லாமே பார்வையாளர்களை உட்கார வைக்கும். அதுக்கு அவங்களோட நடிப்புதான் காரணமாக இருக்கும். இந்தப் படத்துல நல்ல கதை இருக்கு. குடும்பத்தோட ரசிக்கக்கூடிய கதை. இந்த படம் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார்.






