மணிரத்னத்தின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி மிக பிரமாண்டமாக வெளியாகி இருந்தது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வர நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மணிரத்னத்தின் அண்ணன் இறப்பு குறித்த காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மணிரத்னத்தின் அண்ணா குறித்த தகவல்:
மணிரத்னத்தின் அண்ணா மிகப்பெரிய தயாரிப்பாளர். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. மணிரத்தினத்தின் அண்ணா பெயர் ஜி.வெங்கடேஸ்வரன். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தார். ஜீவி என்ற பெயரில் இவர் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார். முதலில் இவர் தன்னுடைய மனைவி சுஜாதா பெயரில் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார்.
ஜிவி திரைப்பயணம்:
அந்த நிறுவனத்தில் இருந்து தான் நாயகன் படத்தை ஹிந்தியில் வெளியிட்டு இருந்தார். பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால், தமிழில் வெற்றி பெறவில்லை. தமிழில் மட்டும் 50000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கே டி குஞ்சிமொன் பேசி இருந்தார். இதனால் 1990 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய மனைவி பெயரில் இருந்த நிறுவனத்தை ஜிவி என்று தன்னுடைய பெயருக்கு மாற்றினார். அதற்கு பிறகு அஞ்சலி என்ற படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது. அதன் பின் இவர் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஜிவி தற்கொலை:
மேலும், இவர் தயாரிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் என்ற படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. இவருடைய தயாரிப்பில் இவர் எட்டு படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்குப் பின்பு அவர் தயாரித்த படங்கள் எல்லாமே தோல்வியடைந்தது. இதனால் இவர் பண நெருக்கடிக்கு ஆளானார். இவருடைய சூழலை புரிந்து கொண்டு விஜயகாந்த் சம்பளம் வாங்காமலே படம் ஒன்று நடித்திருந்தார்.
ஜிவி இறப்பு:
ஆனால், அந்த படமும் வெற்றி அடையவில்லை. தொடர் பட தோல்வியால் இவருக்கு கடன்காரர்கள் தொல்லை இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிரத்தினத்தின் அண்ணன் ஜிவி அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். இதை சமீபத்தில் கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தின் ஆடியோ விழாவில் குஞ்சுமோன் என்பவர் கூறி இருந்தார். மணிரத்தினத்தின் அண்ணன் ஜிவி இறந்தது குறித்த காரணம் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.