இயக்குனர் மோகன் ஜி கைதாகி இருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே திருப்பதியில் லட்டு குறித்த செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகில் பிரசத்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக எழுத்துல சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தார்கள். இது குறித்து இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில், திருப்பதி லட்டு விஷயத்தில் எப்படி மனசாட்சி துளி கூட இல்லாமல் இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடிய இருக்கீங்க. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு என்றும், இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.
மோகன் ஜி பேட்டி:
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி அளித்த மோகன் ஜி, இந்த பிரச்சனையில் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது திருப்பதி தேவஸ்தானம் தான். இப்ப கொழுப்பு மாதிரி, யாராவது விஷம் கலந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். இது குறித்து பெரிய பிரபலங்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. திருப்பதி தேவஸ்தானத்தில் பணம் இல்லையா என்ன நல்ல நெயில் லட்டை உருவாக்க வேண்டும். தேவஸ்தானம் போர்ட் கலைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுவே வேற மதத்தில் நடந்திருந்தால் அவங்க அமைதியாக இருந்திருப்பார்களா.
#TirupatiLaddu எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். pic.twitter.com/tTmKzSppHk
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 19, 2024
பஞ்சாமிர்தத்தில் கருத்ததடைமாத்திரைகள்:
மேலும், இந்த மாதிரி பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். நம்ம ரொம்ப புனிதமாக நினைக்கிற ஒரு கோவிலில் பஞ்சாமிர்தத்திலும், ஆண்மை குறைவு ஏற்படுத்துற மாத்திரைகளை கலப்பதாக செவி வழியாக கேள்விப்பட்டேன். பிறகு அந்த செய்தி வெளியே வராமல் தடுத்து, எல்லாத்தையும் தடயம் இல்லாமல் அழித்துவிட்டார்கள். இதுகுறித்து பல பேர் விளக்கம் அளித்து இருந்தாலும், எனக்கு வந்த தகவலின்படி பஞ்சாமிர்தத்தில் கருத்ததடை மாத்திரைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பிரபலமங்கள் முன்வர வேண்டும்:
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இது போல் செய்திருப்பதாக சொன்னார்கள் என்று கூறியிருந்தார். இது போல் விஷயங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடக்கலாம். இதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கு. இந்த நேரத்தில் இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதம் என்பது ஒரு புனிதமான விஷயம். இப்ப நடந்த விஷயம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு பெருமையாக போயிட்டு வந்து வீடியோ போட்ட பிரபலங்கள் இது குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
மோகன் ஜி கைது:
தற்போது இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அதோடு சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து இன்று காலை திருச்சி போலசார் மோகன் ஜி யை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மோகன் ஜி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்த சர்ச்சை கருத்துக்கள் தான் அவரின் கைதுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருந்தபோதும் கைதான முழுமையான காரணம் இன்னும் எதுவும் வெளியாகவில்லை.