பகாசூரன் பட பாணியில் பணத்தை பறிக்கும் மோசடி கும்பல்- இயக்குனர் மோகன் ஜி சொன்ன அதிர்ச்சி தகவல்

0
189
- Advertisement -

பகாசூரன் பட பாணியில் நடக்கும் பண மோசடி தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் தான் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

மோகன் ஜி குறித்த தகவல்:

இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்து இருந்தாலும், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும், நட்டி, ராதாரவி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

மோகன் ஜி இயக்கிய படங்கள்:

இந்த படத்தில் பெண்களை தவறாக பயன்படுத்தியும், காதல் என்ற பெயரில் அவர்களுக்கு நடக்கும் கொடூரத்தையும், பெண்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பலை பற்றியும் மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இதை அடுத்து இவர் மீண்டும் ரிச்சர்ட் வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பகாசூரன் படம் பாணிலேயே நடந்து வரும் பண மோசடி கும்பல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

மோகன் ஜி பதிவு:

இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், உல்லாசமாக இருக்க பெண்களை அனுப்புவதாக சொல்லி லட்சக்கணக்கில் மோசடி கும்பல் பணம் பறிக்கிறது. இந்த மாதிரி நிறைய இடத்தில் நடக்கிறது. ஆனால், இதில் மாட்டிக் கொண்டவர்கள் புகார் கொடுப்பதில்லை.
இதற்கு முதலில் மொபைலில் லோகோண்டோ என்ற செயலி இருக்கிறது. இதன் மூலமாக தான் மசாஜ் செய்ய, உங்கள் தேவைக்கு பெண்கள் இருக்கிறார்கள் என்று மெசேஜ் போடுவார்கள்.

பண மோசடி கும்பல்:

அதன் மூலம் பெண்கள் மீது இருக்கும் ஆசைக்கு நிறைய பேர் போன் செய்து பேசுவார்கள். அப்போது கஸ்டமர், தங்களுடைய இடத்திற்கே பெண்களை வர வைத்தால் அதற்கு இவ்வளவு பணம் போடுங்கள் என்று அவர்களிடம் பணம் பறித்து விட்டு நம்பரை பிளாக் செய்து விடுவார்கள். சிலர் வசதியான ஹோட்டலுக்கு வரவைத்து பணம் பறித்து விட்டு ஏமாற்றி விடுவார்கள். இந்த மாதிரி நிறைய நடக்கிறது. ஆனால், இது தொடர்பாக யாருமே புகார் கொடுப்பதில்லை. இந்த மாதிரி கும்பலிடம் இருந்து உஷாராக இருங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Advertisement