‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். இவருடைய படைப்புகளில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கிபி 1279 இல் கதை தொடங்குகிறது. சோழர் ஆட்சியின் கடைசி கட்டம். பாண்டவர், சோழர்களோடு போர் செய்து பாண்டியரின் குலதெய்வ சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்நாம் அருகில் உள்ள ஒரு தீவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் 2:
அதை தேடி செல்வது தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க பலரும் கேட்டிருந்தார்கள். அதற்கேற்ப இயக்குனர் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு படம் குறித்த அப்டேட்கள் எதுவுமே வெளியாகவில்லை.
கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ.. pic.twitter.com/D6bPQLwt8v
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 15, 2024
மோகன் ஜி பதிவு:
இதனால் ரசிகர்களும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட்டாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள். இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ என்று கூறி இருக்கிறார்.
பார்த்திபன் சொன்ன விளக்கம்:
அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே பார்த்திபன் ஒரு பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தனுஷ் தான் நடிக்க இருந்தது. தனுஷ் உடைய கால்ஷீட் கிடைக்காததனால் தான் தனுசுக்கு பதிலாக நான் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் 2ல் முதல் பாகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். என்னை விட அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நன்றாக நடிப்பார். அவர் நடித்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
மோகன் ஜி குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதன் பின் இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் மீண்டும் ரிச்சர்ட் ரிஷி வைத்து இயக்கி வருகிறார்.