இந்த சிந்தனைக்குள் வெற்றிமாறன் சார் எப்படிச் சென்றார் என்று எனக்குத் தெரியவில்லை – மோகன் ஜி பேட்டி.

0
835
- Advertisement -

வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறி இருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

- Advertisement -

விடுதலை படம்:

படத்தில் மக்கள் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார்.

போலீஸ் செய்த செயல்:

போலீஸ் அதிகாரியான சூரி மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தைக் குறித்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய கருத்தை சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

மோகன் ஜி பதிவு:

அதில் அவர், படம் பார்த்த பின் இரண்டு மூன்று நாட்கள் ஆவது விடுதலை படத்தினுடைய தாக்கம் நமக்குள் இருக்கும். இதை எப்படி படமாக்க வேண்டும் என்ற சிந்தனைக்குள் வெற்றிமாறன் சார் சென்றார் என்று எனக்கு தெரியவில்லை. இந்த படம் செய்யலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் எல்லோருக்குமே இருக்கும். தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் இந்த படத்தை பார்க்கும் போது மிகவும் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்வார்கள். விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் பெருமாள் போன்ற கதாபாத்திரத்தில் உண்மை இருப்பவர்களின் ஆழம் எனக்கு தெரியும்.

விடுதலை படம் குறித்து சொன்னது:

நிஜப் பெருமாளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். திரெளபதி படத்தில் இதேபோன்று மூன்று தலைவர்களின் பெயர்களை சொன்னதற்கு அதை எல்லாம் சொல்லக்கூடாது என்று கட் செய்து விட்டார்கள். வெற்றிமாறனால் தான் இது போன்ற படத்தை கொடுக்க முடியும். இந்த கதையை எங்கு தொட்டாலும் வெடிக்கும். அவ்வளவு சிக்கலான கதை. கொஞ்சம் பிசிரு தட்டினால் கூட இவரைத்தான் காட்டினார்களா? அவரைத்தான் காட்டினார்களா? என்று சொல்லிவிடுவார்கள். இயக்குனர்களுக்கு இது மாதிரியான தைரியம் இருக்க வேண்டும். அது வெற்றிமாறன் சாருக்கு நிறையவே இருக்கிறது. இந்த மாதிரி என்னிடம் 100 கதைகள் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement