இதனால் என்ன தான் சாதிக்கப் போறீங்க?- நெல்லை கலப்பு திருமணம் பற்றி இயக்குனர் மோகன். ஜி போட்ட பதிவு

0
110
- Advertisement -

ஜாதி மறுப்பு திருமணம் நடந்தது குறித்து இயக்குனர் மோகன் ஜி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து இருக்கிறார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு கடந்த வாரம் சென்றிருந்தார்கள்.

-விளம்பரம்-

அங்கு இந்த காதல் ஜோடிகளுக்கு கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். இதனை அறிந்த பெண்ணுடைய தந்தை மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்ல அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால், அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்துடன் செல்ல மறுத்திருக்கிறது. இதனால் கட்சியை நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பின் வாக்குவாதம் முற்றிய பிறகு கட்சி நிர்வாகிகளுக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

நெல்லை சாதி மறுப்பு திருமணம்:

இதனை அடுத்து கட்சியினுடைய அலுவலகம் கண்ணாடி, இருக்கைகள், கதவுகள் என எல்லா பொருள்களையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்து இருந்தார்கள். அதன்படி ஒன்பது பிரிவுகளில் கீழ் பெண் வீட்டாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

வைரலான வீடியோ:

இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது கட்சியின் அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர் காலில் பெண்ணுடைய தாய் மற்றும் சகோதரர் இருவருமே காலை பிடித்து, எங்களுடைய பெண்ணை எங்களுடனே அனுப்பிவிடுங்கள் என்று கதறி அழுதிருக்கிறார். தற்போதைய இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மோகன்.ஜி பதிவு:

அதில் அவர், இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இது எந்த மாதிரியான வலி என்று. பெற்றவர்களை இப்படி புரண்டு அழ வைத்து அப்படி என்ன தான் சாதிக்க போறீங்க தம்பி, தங்கைகளே அவர்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள். அதுவே உண்மையான காதல் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மோகன் ஜி திரைப்பயணம்:

‘பழைய வண்ணார்பேட்ட’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் தான் அடி எடுத்து வைத்தார். பின் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது. அதற்கு பின் இவர் இயக்கிய ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்கள் எல்லாம் ஜாதியை மையமாக எடுக்கப்பட்டு இருந்தது.

Advertisement