விஜய் அழைத்தாலும் நான் வரமாட்டேன், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த KPY பாலா

0
197
- Advertisement -

விஜய்யின் கட்சியில் இணைவது குறித்த சர்ச்சைக்கு கே பி ஒய் பாலா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் கோமாளிகள் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

KPY பாலா:

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:

பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருக்கிறார்.
அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட பாலா மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அதோடு பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். மேலும், கே பி ஒய் பாலா உதவி செய்வதற்கு பலருமே, இவர் அரசியலில் நுழைவதற்கு தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பாலா அரசியல் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் சமீபத்தில் பாலா கொடுத்த பேட்டியில், எனக்கு போதிய அரசியல் அறிவு கிடையாது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன். மற்றவர்களுக்கு நான் செய்யும் உதவிகள் என்னுடைய திருமணத்திற்கு பின்பும் தொடரும் என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக, விஜய் ரசிகர்கள் பாலாவை திட்டி இருந்தார்கள்.

விஜய் அரசியல்:

இதற்கு கே பி ஒய் பாலா சோசியல் மீடியாவில், இது முதலில் கே பி ஒய் பாலாவுக்கு தெரியுமா? என்று காமெடியாக பதிவு போட்டிருக்கிறார். இதன் மூலம் இவர் இது சொல்லவில்லை என்று உறுதியாகி இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இவர் கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் மட்டும் தான் நடிக்க இருக்கிறார். இதை அடுத்து இவர் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement