விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.
உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் ரோகினி கொடுத்த ஐடியா படி விஜயா, பரதநாட்டிய வகுப்பை தொடங்குகிறார். ஆனால், வகுப்பிற்கு யாருமே வரவில்லை. இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் வருகிறது. முத்து- மீனா இருவருமே விஜயாவின் வகுப்பிற்கு மாணவர்களாக செல்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல்:
இருந்தாலும், ஒழுங்காக நடனம் ஆட தெரியாமல் விஜயா கழுத்து சுளுக்கி விடுகிறது. இதனால் அவரால் வகுப்பு எடுக்க முடியவில்லை. பின் ரோகினி மாமா என்று சொல்லிக் கொண்டு வந்த மலேசியா மாமாவை மீனா பார்த்து விடுகிறார். உடனே அவர் தப்பித்து செல்ல மீனாவும் விடாமல் துரத்திக் கொண்டு போனார். கடைசியில் அவர் ரோகினியின் கடைக்குள் சென்று விடுகிறார். அவரை ஒரு பிரிட்ஜில் ரோகினி தோழி மறைத்து வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம், முத்துவின் நண்பன் செல்வத்திற்கு பிரிட்ஜ் வேணும் என்பதால் மனோஜ் கடைக்கு வருகிறார்.
சீரியல் கதை:
ஒரு வழியாக மலேசியா மாமா தப்பித்து விடுகிறார். இருந்தாலும், மீனா-முத்துக்கு சந்தேகம் வருகிறது. இது குறித்து இருவருமே பேசி கொண்டு இருப்பதை ஒட்டு கேட்ட ரோகினி பயத்தில் இருக்கிறார். பின் ரோகினி, வீட்டில் உள்ள எல்லோர் முன்பும் தன்னுடைய மலேசியா மாமாவுடன் போனில் பேசுகிறார். முத்துவும் போனை வாங்கி பேசுகிறார். இன்னும் முத்துவிற்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. மேலும், நேற்றைய எபிசோடில், ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை எடுத்த முடிவு:
இதனால் அவர், அனைவரிடமும் மாதம் நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்கிறார்கள். அதற்குப் பின் வீடு கட்டுவதற்கு குறித்து தன் நண்பரிடம் அண்ணாமலை பேசுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி, மீனாவை வம்பிழுத்து பேசுகிறார். இதனால் கடுப்பாகி மீனாவும் ரோகினியை திட்டுகிறார். அதன் பின் மேலே வீடு கட்டுவதற்கு 5 லட்சம் ஆகும் என்று சொல்வதால் வீட்டு பத்திரத்தை அடகு வைக்கலாம் என்று அண்ணாமலை சொல்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே விஜயா, என்னுடைய அப்பா எனக்கு தந்தது. யாருக்கும் பத்திரத்தை தர முடியாது என்று மறுக்கிறார். பின் விஜயா, மீனா இடையே வாக்குவாதம் அதிகம் ஆகிறது. இந்த விவகாரம் ஸ்ருதி அம்மாவிற்கு தெரிந்தவுடன் வீட்டில் கலகம் பண்ண திட்டம் போடுகிறார். இனி வரும் நாட்களில் மேலே வீடு கட்ட அண்ணாமலை என்ன செய்யப் போகிறார்? ஸ்ருதியின் அம்மா என்ன திட்டம் போடுகிறார்? மனோஜ்- முத்து இடையே ஏற்படும் பிரச்சனை போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.