தனி ஒருவன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் – மோகன்ராஜா ஓப்பன் டாக்

0
10443
- Advertisement -

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி, நயன்தரா, அரவிந்தசாமி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் தனி ஒருவன். மோகன்ராஜாவின் சினிமா வாழ்க்கையில் தனி ஒருவன் மிகப்பெரிய திருப்பத்தை கொடித்த படமாகும். ரீமேக் படங்களாக கொடுத்து வந்த மோகன்ராஜா திடீரென தனிஒருவன் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவை தன் பக்கம் திருப்பினார்.

-விளம்பரம்-

Mohan raja

- Advertisement -

ஆனால் இந்த கதை எழுதியது, எடுக்கவேண்டிய மொழி என அனைத்துமே வேறு மாதிரியாக இருந்துள்ளது. முதலில் இந்த கதை தெலுங்கு மொழியில் எடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகுபலி நாயகன் பிரபாசுக்காக, அவரை போலீஸ் கேரக்டரில் நடிக்க வைக்க எழுதப்பட்டுள்ளது. ஆனால், கடைசில் பிரபாஸ் பாகுபலியில் பிஸியாக இருந்ததால், தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

prabhas

மேலும், போலீஸ் கேரக்டரில் தன் தம்பி ஜெயம்ரவியை வைத்து கதையை திருத்தி எழுதியுள்ளார் மோகன்ராஜா.இந்த விஷயத்தை தற்போது வெளியில் கூறியுள்ளார் மோகன். இருந்தாலும், இந்த கதையை தல-தளபதியை வைத்து எடுத்திருக்கலாம் என தற்போது வரை பேச்சு நிலவி வருகிறது.

Advertisement